29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 1434966800 2
மருத்துவ குறிப்பு

விரதம் இருந்தால் இளமையாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம் – ஆய்வில் தகவல்!!!

நமது, முன்னோர்கள் ஏதோ ஓர் முக்கியமான காரணத்திற்காக சொல்லி சென்றவை எல்லாம் அறிவியல் மற்றும் வாழ்வியல் சார்ந்தது என்பது ஒவ்வொன்றாக இன்று அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. விரதம் இருந்தால் இளமையாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என, கடந்த வாரம் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது முன்னோர்கள், பல காரணங்கள் சொல்லி விரதம் இருப்பதை அன்றாட பழக்கத்தில் ஒன்றாய் அமைத்து வைத்திருந்தனர். சில கடவுள்களை வழிப்படும் போதும், வருடங்களில் புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களிலும் விரதம் இருப்பதை ஏதோ ஓர் காரணத்தை காட்டி கட்டாயப்படுத்தி வைத்திருந்தனர்.

காலப்போக்கில் சிலரின் அறியாமையினாலும், திரித்துக் கூறப்பட்ட பதில்களாலும் விரதம் இருப்பது மூடநம்பிக்கையாக மாற்றப்பட்டது. ஆனால், இன்று அறிவியல் ரீதியாகவே விரதம் இருப்பது உடலின் வயதாகும் தன்மையை குறைக்கும் என்றும், நீண்ட ஆயுளுடன் வாழ உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது….

மாதத்தில் ஐந்து நாட்கள்

மாதத்தில் ஐந்து நாட்கள், நாம் சாப்பிடும் உணவில் 50% கலோரிகளை குறைத்து சாப்பிட்டு வந்தால், நமது ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நோயற்ற வாழ்வு

உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில், வாரத்தில் ஒரு முறையாவது விரதம் அல்லது டயட் இருப்பவர்களுக்கு, நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் அபாயம் மற்றும் வேகமாக முதிர்ச்சி அடையும் தோற்றம் போன்ற பாதிப்புகள் எற்படுவதில்லையாம்.

மற்ற நாட்கள்

மாதத்தில் ஐந்து நாட்களை தவிர மற்ற நாட்கள் எப்போதும் போல சாதாரணமாக சாப்பிடுவோரை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாதம் முழுக்க டயட் இருக்காமல், வாரம் ஒருமுறை மட்டும் விரதம் இருப்பதாலேயே இவ்வாறான நல்ல மாற்றங்கள் காண இயல்வது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கின்றது.

முந்திய ஆய்வு

முந்திய ஆய்வுகளில், குறிப்பிட்ட குறுகிய காலம் விரதம் இருப்பதால் உடல் நலம், ஆரோக்கியம் மேம்படும் என்று தெரியவந்துள்ளது. அதாவது, நமது புரட்டாசி, மார்கழி மாத விரதங்கள் போல.

எச்சரிக்கை

ஆனால், இந்த விரத முறையானது முதியவர், குழந்தைகள் மற்றும் உடல்நிலை மலிந்து காணப்படுவோர் எல்லாம் பின்பற்ற கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

உணவு சதவீதம்

இந்த ஆய்வில், விரதம் எனிலும் முழுமையாக பட்டினி இருக்க கூறவில்லை. தினசரி உட்கொள்ளும் உணவு அளவில் 34 – 54% உணவினை / கலோரிகளை குறைத்துக் கொண்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்கள்

இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அந்த ஐந்து நாட்களில் அவர்களது டயட்டில் 1,095 கலோரிகளில் இருந்து 790 கலோரிகளாக குறைக்கப்பட்டதாம். இது, தொடர்ந்து மூன்று மாதக் காலத்திற்கு பின்பற்றப்பட்டது. இதன் முடிவில், அவர்களது இரத்த சர்க்கரை அளவில் 10 சதவீதம் குறைவு ஏற்பட்டிருந்ததுக் கண்டறியப்பட்டது.

ஐ.ஜி.எப்.1

இந்த ஆய்வின் முடிவில் விரதம் கடைப்பிடிக்கப்பட்டவர்களில், மனிதர்களின் வயது அதிகமாகும் / வேகமான முதிர்ச்சி குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கும் ஐ.ஜி.எப்.1 எனும் வேதியல் இரசாயனம் 24% குறைந்துக் காணப்பட்டதாம்.

ஆராய்ச்சியாளர்

வால்டர் லோங்கோ தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும் இந்த ஆய்வை நடத்தியவருமான வால்டர் லோங்கோ (Valtar Longo), "இந்த ஆய்வு மிகவும் மகிழ்ச்சியான முடிவை அளித்துள்ளது. நாங்கள் இந்த முடிவிற்காக தான் காத்திருந்தோம். மாதத்தில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே நாங்கள் கூறிய உணவுக் கட்டுப்பாடு கட்டாயப்படுத்தப்பட்டது. மற்ற 25 நாட்களும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உணவு உட்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது" என்றும் கூறியுள்ளார்.

விலங்குகளுக்கும்

பொருந்தும் இதே ஆய்வை, ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு மத்தியிலும் நடத்திப் பார்த்தாதாகவும், அவைகளிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

22 1434966800 2

Related posts

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

நீர்ச்சத்து குறைவும்… பாத வெடிப்பும்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், உடனடியாக உங்கள் சிறுநீரகத்தை பரிசோதிக்கவும்.

nathan

பல் அழுக்குகள் நீங்கி பளிச்சென இருக்க இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

அதிகாலையில் முகம் வீங்குகிறதா? இதோ தீர்வு

nathan

தெரிந்துகொள்வோமா? பற்களை வெண்மையாக்க சில வழிமுறைகள்

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எளிய ஆயுர்வேத குறிப்புகள்!

nathan

‘தைராய்டு புயல்’ பற்றிய சில முக்கிய தகவல்கள்! தைராய்டு புயல் ஒரு அபாயகரமான நிலை

nathan