26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
20 1445319442 7 neverapplymoisturiserondryskin
முகப் பராமரிப்பு

முகத்தைக் கழுவும் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!!!

நம் உடலிலேயே அழுக்குகள் அதிகம் சேரும் ஓர் இடம் என்றால் அது முகம் தான். எனவே அத்தகைய முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நீரினால் முகத்தைக் கழுவுவோம். ஆனால் அப்படி முகம் கழுவும் போது நாம் நம்மை அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். எனவே ஒவ்வொருவரும் முகத்தைக் கழுவும் போது செய்யும் தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தைக் கழுவுகிறோம் என்பது முக்கியம் அல்ல, சரியான முறையில் கழுவுகிறோமா என்பதே முக்கியம். சரியான முறையில் முகத்தைக் கழுவினால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும். இங்கு முகத்தைக் கழுவும் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.

கைகளை முதலில் கழுவுங்கள்

முகத்தைக் கழுவும் முன், கைகளை நன்கு சுத்தமாக தேய்த்துக் கழுவுங்கள். இல்லாவிட்டால், கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நேரடியாக முகத்தில் பட்டு, அதனால் சரும பிரச்சனைகளான முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை வரக்கூடும்.

சூடான நீரைப் பயன்படுத்தாதீர்கள்

முகத்தைக் கழுவுவதற்கு மிகவும் சூடான நீரைப் பயன்படுத்தாதீர்கள். வெதுவெதுப்பான மற்றும் மிதமான குளிர்ச்சியுடன இருக்கும் நீரைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் மிகவும் சூடான நீரை முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நுண்குழாய்களில் இடைவெளி ஏற்படும். மேலும் சருமத்துளைகள் திறக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் சுரக்கப்பட்டு, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை வரும்.

அவ்வப்போது முகத்தைக் கழுவுங்கள்

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தை பலமுறை கழுவுங்கள். இதனால் முகத்தில் எண்ணெய் பசை நீக்கப்படுவதோடு, அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் சுத்தமாக இருக்கும்.

கடுமையாக ஸ்கரப் செய்ய வேண்டாம்

சிலர் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற, ஸ்கரப்களைப் பயன்படுத்துவார்கள். அப்படி நீங்கள் ஸ்கரப் பயன்படுத்துவதாக இருந்தால், கடுமையாக முகத்தைத் தேய்ப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் கடுமையாக முகத்தைத் தேய்ப்பதால், சருமத் துளைகள் திறக்கப்பட்டு, பருக்கள் வரக்கூடும். எனவே வாரம் ஒருமுறை ஸ்கரப் செய்வதோடு, மென்மையாக செய்யுங்கள்.

மேக்கப்பை முதலில் நீக்குங்கள்

பலர் முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள மேக்கப் போய்விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. எப்போதுமே முகத்தில் உள்ள மேக்கப்பை ரோஸ்வாட்டர் அல்லது மேக்கப் ரிமூவர் கொண்டு நீக்கிவிட்டு, பின்பே முகத்தை நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தை கடுமையாக தேய்த்துக் கழுவ வேண்டிய அவசியம் இருக்காது. Show Thumbnail

தலைக்கு குளித்த பின்னர் முகத்தைக் கழுவுங்கள்

பலரும் தலைக்கு குளித்த பின்னர், இறுதியில் முகத்தை நீரால் கழுவமாட்டார்கள். எப்போதுமே தலைக்கு குளித்தால், இறுதியில் முகத்தை நீரால் கழுவுங்கள். இதனால் தலையில் இருந்த அழுக்குகள் மற்றும் பொடுகு முகத்தில் தங்கியிருப்பதைத் தடுத்து, சரும பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உலர்ந்த சருமத்தில் மாய்ஸ்சுரைசர் வேண்டாம்

எப்போதுமே சருமம் நன்கு உலர்ந்த பின்னர் மாய்ஸ்சுரைசரைத் தடவாதீர்கள். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படாது. எனவே சருமம் ஓரளவு ஈரமாக இருக்கும் போதே மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.

20 1445319442 7 neverapplymoisturiserondryskin

Related posts

தழும்பை மறைய வைக்கனுமா?

nathan

வார இறுதியில் முகத்​ததை​ பிரகாசமனதாக மாற்ற வேண்டுமா? இங்கே சில வழிகள் உள்ளன!

nathan

சோர்வுடன் காணப்படும் முகத்தைப் பொலிவாக்க உதவும் பொருட்கள்!

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika

எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan

பெண்கள் சிவப்பழகை பெற..

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்

nathan