என்னென்ன தேவை?
வேகவைத்த உருளைக்கிழங்கு -3
தயிர் -1கப்
வெங்காயம் -1
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
பூண்டு -4பல்
இஞ்சி -1துண்டு
சீரகம் -1/2 ஸ்பூன்
கடலை மாவு -1ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி -தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படி செய்வது?
வேகவைத்து உருளைக்கிழங்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்,சிவப்பு மிளகாய் 2, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சுருள வதக்க வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கை கையால் மசித்து தூவி விடவேண்டும். பின்னர் பெருங்காயத்தூள், கரம் மசாலா,சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். கடலைமாவுடன் தயிர் கலந்து சிறிது தண்ணீர் சோ்த்து கரைத்து உருளைக்கிழங்கு மசாலாவில் கலந்து போதுமான அளவு உப்பு சேர்த்து கெட்டியானதும் இறக்கினால் சுவையான பஞ்சாப் உருளைக்கிழங்கு தயார்.