90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர்.
1991ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் சுகன்யா.
சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் வேடத்தில் நடித்த சுகன்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. தனது நடிப்பிற்காக பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுகன்யா கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாகிவிட்டார்.
ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக முதியவர் வேடத்தில் சுகன்யா நடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து சுகன்யாவை அனைவரும் ‘லேடி கமல்ஹாசன்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.
சுகன்யா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நுழைவதற்கு முன்பு பெப்சிக்காக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியை தனுமா தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை சுகன்யா, 2002ல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தபோதிலும் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், சின்னத்திரையில் பல நாடகத் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார் சுகன்யா.
சுகன்யா பரதநாட்டியத்தின் மீது தீராத காதல் கொண்டவர் மற்றும் அதன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பார்.
அவர் தனது மகளுடன் வசிக்கிறார், திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளுக்கு அவரை அழைத்துச் சென்றதில்லை. சுகன்யா தனது மகளை மீடியாவிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சுகன்யாவின் மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ஹாட் டாபிக் ஆகி வருகிறது. இது சுகன்யாவின் மகள் என்பது போல நெட்டிசன்கள் இந்தப் படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.