p49h
சைவம்

பிரவுன் சேமியா பிரியாணி

சேமியா வெஜிடபிள் பிரியாணி

தேவையானவை:

சேமியா – 200 கிராம்
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் கலவை – 150 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 (சற்றுபெரிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
சிறிய‌ தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 3 (கீறி விடவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
புதினா இலைகள் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2

p49h

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து சில சொட்டு எண்ணெய் விட்டு சேமியா சேர்த்து கோல்டன் பிரவுன் நிறம் ஆகும் வரை வறுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 5 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது சேமியாவைச் சேர்த்து மூன்று நிமிடம் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து, ஒரு ப்ளேட்டில் சேர்த்து ஆற விடவும். காய்கறிகளை மைக்ரோவேவ் பவுலில் சேர்த்து சிறிது தண்ணீரைத் தெளித்து, இரண்டு நிமிடம் அவனின் உள்ள வேகவைத்து பின்பு வெளியே எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். இதில் பெரிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி, புதினா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கி, வெந்த சேமியா, காய்கறிகள் சேர்க்கவும். மேலும் இரண்டு நிமிடம் மிருதுவாகக் கிளறி நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மூடிபோட்டு சிம்மில் வைத்து மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கிப் பரிமாறவும். இதற்கு ரைத்தா செம காம்பினேஷன்.

Related posts

பூசணிக்காய் பால் கூட்டு

nathan

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி

nathan

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

nathan

வாழைக்காய் பொடி

nathan

மஷ்ரூம் மசாலா

nathan

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

nathan

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி

nathan

சோயா சங்க்ஸ் பிரியாணி|soya chunks biryani

nathan