வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் கதி. கதி என்றால் தயிரை கடலை மாவுடன் சேர்த்து செய்யும் ஒரு ரெசிபியாகும். இந்த ரெசிபி தென்னிந்தியாவில் செய்யும் மோர் குழம்பு போன்று தான் இருக்கும். இதில் ஒரு வித்தியாசம் தான் கடலை மாவு.
இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் சாதத்திற்கு சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த குஜராத்தி கதி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 1/2 கப்
இஞ்சி பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கறிவேப்பிலை – சிறித
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 1
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.
பின்பு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள கலவையில் ஊற்றி கிளறி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சூப்பரான குஜராத்தி கதி ரெசிபி ரெடி!!!