30.8 C
Chennai
Tuesday, Aug 19, 2025
kal1
Other News

தலையில் கல்லை போட்டு மனைவி படு-கொலை

மணிமங்கலம் அருகே, தாம்பரம் அடுத்த, மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குடனூர் பகுதியில், அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரத்யேஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதியினர் கடந்த 15 நாட்களாக அப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளனர்.

 

 

இந்நிலையில், தலையில் பலத்த காயம் அடைந்த பிரியங்காகுமாரி, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்ததாக அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

 

 

 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

நேற்று இரவு பிரத்யேஷ் கைலாஷுக்கும், பிரியங்கா குமாரிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரத்யேஷ் கைலாஷ் தனது மனைவி பிரியங்கா குமாரியின் தலையில் கல்லை எறிந்து கொன்றுவிட்டு ரயிலில் ஏறி தப்பிச் சென்றார்.

 

பின்னர், ரயிலில் சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற கைலாஷை மணிமங்கலம் போலீஸார் சென்ட்ரல் ஸ்டேஷனில் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர்.

Related posts

நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்

nathan

இந்திய கோடீஸ்வரர்களில் அம்பானி மீண்டும் முதலிடம்

nathan

வேட்டையன் படத்தில் ரஜினி பயன்படுத்திய காந்த கண்ணாடி விலை எவ்வளவு

nathan

100 கோடியை கடந்து சாதனை செய்த ஜவான்.!

nathan

சிம்ம ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

nathan

பீர்க்கங்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

nathan

EXCLUSIVE Jaime King Responds to Trolls Who Shame Her for Being ‘Too Skinny’

nathan

கமல் பயன்படுத்திய புல்லட் பைக் : வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!

nathan

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க எளிய வழிகள்

nathan