24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 658208ea49a95
Other News

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன டாப் 5 வீரர்கள் விவரம்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஏலத்தில் 2024 ஐபிஎல்லுக்கு விற்கப்பட்டார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகின் நம்பர் ஒன் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று துபாயில் நடைபெற்றது.

இதில் 10 அணிகளின் நிர்வாக அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்கள் அணிகளுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தனர்.

 

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை களமிறக்க வேண்டும், அதில் அதிகபட்சம் 8 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்க வேண்டும்.

இந்த மினி ஏலத்தில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 31 கோடியே 35 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளது.

இதையடுத்து வரிசையாக சன்ரைசர்ஸ் அணி 30 கோடியே 80 லட்சம், சென்னை 30 கோடியே 40 லட்சம், குஜராத் 30 கோடியே 30 லட்சம், மும்பை 16 கோடி 70 லட்சம் ரூபாய், டெல்லி 19 கோடியே 5 லட்சம் ரூபாய், லக்னோ 12 கோடியே 20 லட்சம் ரூபாய்.

பஞ்சாப் 24 கோடியே 95 லட்சம் ரூபாய், பெங்களூர் 20 கோடியே 40 லட்சம் ரூபாய், ராஜஸ்தான் 14 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ஏலத்தில் சுமார் 24 கோடியே 75 லட்சம் வாங்கியது. அவருக்குப் பிறகு மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 கோடியே 50 லட்சம் வாங்கியது.

மூன்றாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து வீரர் பர்ரெல் மிட்செல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் சுமார் 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

நான்காவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி ஹர்ஷல் படேலை 11 கோடியே 75 லட்சத்திற்கும் வாங்கியது, ஐந்தாவது இடத்தில் இருந்த அர்சாலி ஜோசப்பை பெங்களூரு அணி 11 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.

Related posts

தற்காப்பு கலை போட்டியில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர்

nathan

கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி: மிகப்பெரிய செல்வாக்கைப் பெறுவார்

nathan

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

nathan

கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

nathan

சமோசா விற்று ஆண்டுக்கு ரூ.45 கோடி…சாதித்த இளம் தம்பதி!

nathan

உலகின் மிகப்பெரிய வெள்ளரிகளை விளைவித்து பிரித்தானியர் சாதனை!

nathan

மீண்டும் தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

nathan

எதிர்நீச்சல் ஜனனியின் ரியல் அப்பா யார் தெரியுமா?

nathan

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை சரிசெய்வது எப்படி…?தெரிஞ்சிக்கங்க…

nathan