29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1431581098 5weirdsoundsyoudontwantyourbodytomake
மருத்துவ குறிப்பு

இந்த மாதிரி சத்தமெல்லா உங்க உடம்புக்குள்ளக் கேட்டுருக்கீங்களா…? பாத்து பக்குவமா இருந்துக்குங்க!!

நம் உடம்புக்குள்ளே சில வினோதமான, விசித்திரமான ஒலிகள் ஒலிக்கும். நாம் அறிந்தது எல்லாம், வாயுவால் வெளிவரும் டர்ர், புர்ர்ர் சத்தம், மற்றும் விரலில் சொடக்கு எடுக்கும் சத்தம். இது, பொதுவாக வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்கும் சத்தங்கள் தான்.

ஆனால், உங்கள் உடலுக்குள் அவ்வப்போது சில சப்தங்கள் ஏற்படும். உதாரணமாக வயிற்றுக்குள் ஏற்படும் கடக், மொடக்கு சத்தம், திடீரென காதில் ஏற்படும் கொய்ய்ய்… சத்தம் போன்றவை. இந்த சத்தமெல்லாம் எதற்காக ஏற்படுகிறது, எதனால் ஏற்படுகிறது, இதன் பின்னணியில் ஏதாவது அறிகுறிகள் இருக்கின்றனவா என்று உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக நமது உடல் அமைதியான ஓர் ஊடகம் தான். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தான் இது போன்ற கசமுசாவென்று சத்தங்களை எழுப்பும். நம் நாட்டு ஊடகங்களை போலவே. இனி, இந்த வினோத, விசித்திர சத்தங்கள் ஏன் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்…

மூட்டுகளில் உடைவது போன்ற சத்தம்

நீங்கள் அதிக நேரம் ஒரே இடத்தில், ஒரே நிலையில் இருந்து எழுந்திருக்கும் போது அல்லது சிலருக்கு சாதரணமாகவே நடக்கும் போது கால்கள் மற்றும் கைகளின் மூட்டு பகுதிகளில் உடைவதுப் போன்ற சத்தம் ஏற்படும். மூட்டு பகுதிகளில் இருக்கும் திரவங்களின் குறைபாட்டின் காரணமாக அப்பகுதியில் வாயு சேர்வதனால் தான் இந்த சத்தம் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் மூட்டு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இதுப் போன்ற சத்தங்கள் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

வயிற்றில் ஏற்படும் கடக், மொடக்கு சத்தம்

இது உண்மையில் உங்கள் வயிற்றில் ஏற்படும் சத்தம் கிடையாது, குடல் பகுதியில் ஏற்படும் சத்தம். உங்கள் உணவு வேலைகளுக்கு மத்தியில் செரிமானம் நடந்துக் கொண்டிருக்கும் போது ஏற்படும் சத்தம் தான் இது. மதிய உணவிற்கு பிறகு, ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் இதை தினந்தோறும் உணர வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, இதுப் போன்ற சத்தம் ஏற்படும் போது வலி ஏதாவது ஏற்பட்டால், மறக்காமல் மருத்துவரை அணுகுங்கள். குடல் பகுதியில் ஏதாவது கோளாறாக இருக்கக் கூடும்.

தாடைப் பகுதியில் க்ளீச் சத்தம்

சிலருக்கு தாடைப் பகுதியில் ஒரு வகையான சத்தம் ஏற்படும். கிட்டத்தட்ட கீச்….கீச்.. போன்ற சத்தம். இது உங்கள் மேல் தாடை மற்றும் கீழ் தாடைப் பகுதிகளின் சரியான சீரமைப்பின்மையினால் ஏற்படும் சத்தம். மாடு போல சூயிங் கம்மை மென்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு, இதுப் போன்ற சத்தம் கேட்கலாம். வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள் தாடைப் பகுதி சார்ந்த பிரச்சனையாக இருக்கப்போகிறது.

மூக்கில் விசில் சத்தம்

சில சமயங்களில், நீங்கள் மூச்சு விடும் போது மூக்கில் மெல்லிய விசில் சத்தம் வரும், இதை நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. பொதுவாக நீங்கள் உணவருந்திவிட்டு அமர்ந்திருக்கும் போது இதுப் போன்ற சத்தம் ஏற்படும். வயிறு முட்ட, அளவுக்கு அதிகமாக சாப்பிடப் பிறகு இதுப் போன்ற சத்தம் ஏற்படுமாம். சில சமயங்களில் நாசியின் பாதையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருந்தால் கூட இதுப் போன்ற சத்தம் ஏற்படுமாம். அடிக்கடி இதுப் போன்று சத்தம் வந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

காதில் கொய்ய்ய்… ரீங்காரம்

திடீரென காதில் மெல்லிய சத்தம் ஒன்று ஒலிக்கும் கொய்ய்ய்… என்ற ரீங்காரம், பின் அதுவே நின்றுவிடும் ஒரு சில நொடிகளில், இதை காதிரைச்சல் என்று மருத்துவ பாணியில் கூறுகின்றனர். மருத்துவர்கள் இது காதில் ஏற்படும் சத்தம் கிடையாது, மூளையில் ஏற்படும் சத்தம் என்றுக் கூறுகின்றனர். இது மூளையில் ஏற்படும் போலியான மின் சமிக்ஞைகளின் காரணமாக ஏற்படும் சத்தமாம்.

தொண்டைப் பகுதியில் க்ளிக் சத்தம்

உங்கள் தொண்டைப் பகுதியில் க்ளிக் செய்வது போன்ற சத்தம் ஏற்பட்டால் அது, நரம்பியல் நோய்களுக்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் தைராய்டு குருத்தெலும்பின் அதிக வளர்ச்சியினால் கூட இதுப் போன்று சத்தம் ஏற்படுமாம். எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நன்று.

தோள்பட்டையில் உடையும் சத்தம்

உங்கள் தோள்பட்டையை உயர்த்தும் போதோ, அல்லது சுழற்றும் போதோ உடைவது போல சத்தம் ஏற்படும். சொடக்கு எடுப்பது போல வலியின்றி ஏற்பட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், வலி ஏற்படுகிறது என்றால் மூட்டுகளில் உராய்வுகள் ஏற்படுகிறது என்று அர்த்தம். இவ்வாறு உராய்வுகள் ஏற்படக் கூடாது. எனவே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

முழங்கை பகுதியில்..

மேல்கூறியபடி தான் இதுவும், மூட்டுகள் சேரும் இடத்தில் இருக்கும் திரவத்தின் குறைபாட்டினால் ஏற்படும் ஒருவகையான இயந்திர சிக்கல்கள்.

குறட்டை

குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடல் பருமன் மற்றும் மதுப் பழக்கம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாசியின் வழியில் காற்று செல்லும் பாதையில் உள்ள சிறு தசையின் வளர்ச்சிக் காரணமாக தான் இந்த குறட்டை சத்தம் வருகின்றது. பொதுவாக நீங்கள் உங்கள் பருமனைக் குறைத்தாலே குறட்டைத் தொல்லை இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

14 1431581098 5weirdsoundsyoudontwantyourbodytomake

Related posts

கழுத்து மட்டும் கருப்பா இருக்கா…இந்த ஆபத்தான நோய் உங்களை தாக்கி விட்டது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கர்ப்ப கால பெண்களுக்கு இடுப்பு வலியை குறைக்க வழிகள்

nathan

நினைவாற்றலை அதிகரிக்க இதை எல்லாம் செய்யுங்க.. அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க சில மகத்தான வழிகள்!!!

nathan

உங்க மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிப்பதற்கான காரணங்கள்!!!

nathan

உங்களுக்கு தாங்க முடியாத கழுத்துவலி வந்தா என்ன செய்வது இதோ சில டிப்ஸ்?

nathan

உங்களுக்கு தெரியுமா கெமிக்கல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கும் கருப்பட்டி

nathan

ஆரோக்கியமாக வாழ கால நேர கட்டுப்பாடு

nathan