28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
13
மருத்துவ குறிப்பு

மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! மூலிகைகள் கீரைகள்!!

மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை!

வெப்பப் பிரதேசங்களில் புதர்ச் செடிபோல வளரக்கூடியது துத்திக்கீரை. இதன் கீரை மட்டும் அல்ல, வேர், பட்டை, விதை, பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

துத்திக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து, கடைந்து சாப்பிடலாம்; துவையலாகவும் செய்து சாப்பிடலாம். உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் நோய்கள் நீங்கும்.
மூலம், உடலில் ஏற்படும் கட்டி, புண்கள் குணமடையும்.
துத்தி இலைகளைக் குடிநீர் செய்து, பாலும் சர்க்கரையும் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்போக்கை (கழிச்சலை) ஏற்படுத்தி, மூலக்கடுப்பு, உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

துத்தி இலைச் சாறு 25 மி.லி எடுத்து, அதில் பாதி அளவுக்கு நெய் சேர்த்துக் கலக்கி உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் கழிச்சல் குணமாகும்.

துத்தி இலையுடன் ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) விட்டு வதக்கி எடுத்து, மூலத்தால் ஏற்பட்ட கட்டிகள், புண்கள் ஆகியவற்றின் மீது கட்டுப்போட புண்கள் நீங்கும்.

துத்திக்கீரையை சாறு எடுத்து, பச்சரிசி மாவு சேர்த்து களிபோல நன்றாகக் கிண்டி, உடலில் உள்ள கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

துத்தி இலையைக் குடிநீர் செய்து, வாய் கொப்பளிக்க, பல் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

துத்தி இலையைத் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, கெட்டியான துணியைத் தோய்துப் பிழிந்து, உடலில் வீக்கம் ஏற்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுக்க, வலி நீங்கும்; வீக்கம் குறையும்.

துத்தி இலையைக் குடிநீர் செய்து, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, ஆறவைத்து கண்களைக் கழுவினால், கண் நோய்கள் நீங்கும்; பார்வை தெளிவாகும். துத்திக் குடிநீரைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் சிறிதளவு பருகி வந்தால், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்கள் கரையும்.13

Related posts

இதோ எளிய நிவாரணம்! சர்க்கரை நோயா? – சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்மைக் குறைவை போக்கி குழந்தைப் பாக்கியம் தரும் அற்புத பொருள் இதுதான்!!

nathan

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

மலச்சிக்கலைப் போக்கும் வழிகள்

nathan

உங்களுக்கு 30 வயதாகின்றதா? மருத்துவர் கூறும் தகவல்கள்!

nathan

இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!!!

nathan

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டது ஏன்?

nathan

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள்

nathan

ஆயுர்வேத வலி தைலம்!

nathan