கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது நல்லது
கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும், வளர்ச்சியும் மேம்படும். கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கும் தர்பூசணியை பெண்கள் சாப்பிடுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிகளின் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ளும்.
உண்மையில் தர்பூசணியை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இதில் கருவின் வளர்ச்சிக்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இருக்க வேண்டும். அதிலும் கோடை என்றால் கர்ப்பிணிகள் அதிக அளவில் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானங்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், உடலின் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும்.
தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் கர்ப்பிணிகள் தர்பூசணியை சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள் தர்பூசணியை உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தால் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சோர்வு ஏற்படுவதும் தடுக்கப்படும்.
தர்பூசணியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படும்.
தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் கடுமையான தசைப் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் தரும்.
தர்பூசணியில் உள்ள அதிகப்படியான லைகோபைன், கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வில் இருந்தும், குமட்டல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் தரும்.