உடலில் நடக்கும் ஒரு இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் வாயு வெளியேறுவது. இந்த வாயு தொல்லையானது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உணவு செரிமானமின்மை, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் ஏற்படும்.
இத்தகைய வாயுவானது உடலில் இருந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியேறலாம். அது அலுவலக மீட்டிங்கின் போதோ அல்லது துணையுடன் டேட்டிங்கில் இருக்கும் போதோ என எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். அப்படி அது வெளியேறும் போது கடுமையான துர்நாற்றம் வீசும்.
அந்நேரத்தில் அருகில் இருப்போரின் முகத்தைப் பார்த்தால், அவர்கள் முகத்தை சுளிக்கும் விதமே நம்மை தர்மசங்கட நிலைக்கு தள்ளும். எனவே இப்படி தர்ம சங்கட நிலைக்கு தள்ளும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபட ஒருசில இயற்கை நிவாரணிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா!!!
சோம்பு
வெறும் சோம்பை வாயில் போட்டு மென்றாலோ அல்லது சோம்பை கொதிக்கும் நீரில் போட்டு 3-5 நிமிடம் கொதிக்க விட்டு குடித்தால், 5-10 நிமிடங்களில் வாய்வுத் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் தரும்.
இஞ்சி
இஞ்சி கூட வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும். அதற்கு சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது ஒரு நாளில் மூன்று வேளை இஞ்சி டீ போட்டு குடித்தாலோ, நல்ல மாற்றம் தெரியும்.
சீரகம்
ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கப் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு, வடிகட்டி உணவு உண்ணும் முன் குடித்தால், வாய்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஆப்பிள் சீடர்
வினிகர் வாய்வுத் தொல்லை மற்றும் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
1/2 டம்ளர் நீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடிக்க துர்நாற்றம் வீசும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
புதினா
புதினாவை நீரில் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வர வாய்வுத் தொல்லை நீங்கும்.
பட்டை
பட்டை கூட வாய்வு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு வெதுவெதுப்பான சோயா பாலுடன், 1/2 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து 5 நிமிடம் கழித்து, மீண்டும் அந்த கலவையை சூடேற்றி மெதுவாக குடித்து வந்தால், நாற்றம் வீசும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஏலக்காய் டீ
போடும் போது, அதில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு, அந்த டீயை குடித்து வந்தால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
பெருங்காயத் தூள்
உணவில் நல்ல வாசனையைத் தரும் பெருங்காயத் தூளை, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வயிற்றின் மேல் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பூண்டு
பூண்டிற்கும் வாய்வு தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் குணம் உள்ளது. அதற்கு சமைக்கும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள் அல்லது தினமும் ஒரு பச்சை பூண்டு சாப்பிட்டு வர வேண்டும்.