25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
floating pregnant head in hands
கர்ப்பிணி பெண்களுக்கு

தண்ணீர்த் தொட்டியில் பிரசவம்!

வெது வெதுப்பான நீர்த்தொட்டிக்குள் கர்ப்பிணியை அமர வைத்து பிரசவம் பார்ப்பது தான் தண்ணீர் பிரசவம் எனப்படுகிறது. இந்த முறையில் குளியல் தொட்டியில் இருக்கும் நீர் 36 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துடன் தொடர்ந்து இருக்கும்படி பராமரிக்கப்படுகிறது.

இது தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தையை சுற்றி உள்ள நீரின் வெப்பநிலைக்கு சமமானது என்று சொல்லலாம். இளம் சூடான நீரில் அமர்வது வேதனையை குறைப்பது மட்டுமின்றி.. இதமாக இருப்பதாகவும் கர்ப்பிணிகள் தெரிவிக்கின்றார்கள். சுடுநீர் காரணமாக தாயின் ரத்த ஓட்டம் சுறுசுறுப்படைந்து கருப்பையின் தசை விரிவாக்கம் கிடுகிடு வென அமைகிறது. இதனால் குழந்தைக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நீரில் அமிழ்ந்திருப்பது தாயின் பதற்றத்தை குறைக்கிறது.

பிரசவம் குறித்து தாயின் மனதில் இருக்கும் அச்சமும் அகலுகிறது. பயமில்லாமல் நம்பிக்கையுடன் மருத்துவர் சொல்லும் விதங்களில் எல்லாம் உடம்பை இயக்க முடிவதால் தண்ணீருக்குள் பிரசவம் எளிதில் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டாகிறது. பொதுவாக பிரசவ அறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நான்கு முதல் ஐந்து மணி நேரமாகிறது. ஆனால் தண்ணீருக்குள் நடக்கும் பிரசவம் இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. அதனால் தான் நீர்த்தொட்டிக்குள் பிரசவம் மேற்கொள்வதை வெளிநாட்டுப் பெண்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் நம் நாட்டில் இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு இன்னமும் வராமல் இருப்பதற்கு காரணம்… நமது பெண்களின் மனநிலைதான். கத்தி, கூப்பாடு போட்டு கதறும் இடமாகவே பிரசவ அறையை கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் பிரசவ அறைக்குள் கொண்டு போனாலே வலியால் கதறத் தொடங்குவார்கள். ஆனால் நீர்த் தொட்டி பிரசவ முறையில் குழந்தை பெற்றுகொள்ள விரும்பும் பெண்ணுக்கு அசாத்திய மனத்திடம் இருக்க வேண்டும்.

வலியை தாங்கிக் கொள்ளவும்…. தேவையான நேரத்தில் வலியை மீறி செயல்படுவதற்குமான கட்டுப்பாடு அவசியம். பிரசவத்துக்கு காலதாமதம் ஏற்பட்டாலும் அத்தனை நேரமும் தண்ணீர்த் தொட்டிக்குள் அமர்ந்திருக்கும் பொறுமை வேண்டும். அப்போதுதான் தண்ணீரில் பிரசவம் நடத்துவது சாத்தியமாகும். இங்கே பெண்களுக்கு இன்னமும் இத்தனை மனத்திடம் வரவில்லை என்பது தான் உண்மை. மேலும் ஆடைகளை கழட்டிவிட்டு முழுமையான விழிப்பு நிலையில் இப்பிரசவ முறை நடைபெறும் என்பதால் இவர்கள் இதை விரும்புவதில்லை.

மேலும் குளியல் தொட்டியில் குளிக்கும் நடைமுறையே நம்முடைய நாட்டில் அனைவருக்கும் சென்றடையவில்லை. அதனால் தண்ணீர்த் தொட்டியில் குளிப்பதற்கான பழக்கமே இல்லாத நம் பெண்களை நீர்ப்பிரசவ அனுபவத்துக்கு சம்மதிக்க செய்வது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

floating pregnant head in hands

Related posts

தாய்பால் தருவதில் தான் குழந்தைகளின் எதிர்கால உடல்நிலை பாதுகாப்பு இருக்கிறது!!

nathan

ஆண் குழந்தை ரகசியம்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை சிசுவை பாதிக்குமா?

nathan

பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

nathan

பிரசவத்தை எளிமையாக்கும் யோகா

nathan

குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…

sangika

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினையா?

nathan

Tips.. கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா?

nathan