என்னென்ன தேவை?
கோதுமை மாவு – 1 1/2 கப்,
வெங்காயத்தாள் – 2 டீஸ்பூன் (நறுக்கியது),
பச்சை மிளகாய் நறுக்கியது – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தலா 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 1/4 கப்,
தண்ணீர் – 1/2 கப்.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை, ஓமம், சீரகம், கரம் மசாலா, பச்சை மிளகாய்,
தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் செய்து தவாவில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.