24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
9224 original
Other News

விஜயகாந்த் குறித்து மன்சூர் அலிகான் உருக்கம் -கருப்பு எம்.ஜி.ஆரே!

தமிழ் திரையுலகின் இணையற்ற நடிகரும், தங்கமணியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் வாழ்த்துவோம்.

நடிகர் விஜயகாந்த் குணமடைய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். செல்வமணி இயக்கிய விஜயகாந்தின் 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் அறிமுகமானவர் ஆர்.கே.மன்சூர் அலிகான். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

நடிகர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மிகுந்த சோகத்தில் இருக்கும் மன்சூர் அலிகான், உருக்கமான அறிக்கை மூலம் தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.

“அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன்.

அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறிய செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர் மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி … உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே!

எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !! கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிகர், ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா … தங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே|வாழிய வாழிய நூறாண்டு ‘!! தாங்களிடம் அடி வாங்க காத்திருக்கும் தம்பி – மன்சூர் அலிகான்.

நடிகர் விஜயகாந்துக்காக திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் மனதார பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

Related posts

பெப்சி உமாவுக்கு டார்ச்சர்..!சீண்டிய அரசியல்வாதி யார் தெரியுமா..?

nathan

இலங்கையில் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் துண்டித்த மனைவி

nathan

பண இழப்புகளை சந்திக்க உள்ள 5 ராசிகள்!

nathan

மகளின் திருமணத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமீர்கான்..

nathan

பாவாடை சட்டையில் அழகில் அம்மாவை தூக்கி சாப்பிடும் ரம்பாவின் மகள்.!

nathan

அயலான் ஸ்பெஷல் தை திருநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் – Cute Family Pic இதோ!

nathan

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் புகைப்படங்கள்

nathan

இலங்கையில் விஜயின் லியோ பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

nathan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க?

nathan