26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
19 1461046359 5 recipe5
சரும பராமரிப்பு

கருப்பா இருக்கும் கழுத்தை வெள்ளையாக்குவது எப்படி?

வெயில் காலத்தில் பெண்கள் பலரும் தங்களது முடிகளை தூக்கி கொண்டைப் போட்டுக் கொள்வார்கள். ஆண்களோ அதிகம் வியர்க்கும் என்பதால் மிலிட்டரி கட் செய்து கொள்வார்கள். இப்படி இருக்கும் போது கழுத்துப் பகுதி கருமையாக இருந்தால் எப்படி இருக்கும்.

இப்படி கருமையாக உள்ள கழுத்தை போதிய பராமரிப்புக்களின் மூலம் வெள்ளையாக்கலாம். குறிப்பாக ப்ளீச்சிங் தன்மை கொண்ட எலுமிச்சையைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால், மிகவும் வேகமாக கருமை அகலும்.

இங்கு எலுமிச்சையைக் கொண்டு எப்படி கழுத்தில் உள்ள கருமையைப் போக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி பயன் பெறுங்கள்.

எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, பஞ்சு பயன்படுத்தி இரவில் படுக்கும் முன் கழுத்தில் தடவி இரவு முழுவமும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறையும்.

எலுமிச்சை மற்றும் தேன்

இந்த முறை கழுத்து கருமையை மட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் தடுக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் மஞ்சள் தூள்

எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இந்த முறையை மேற்கொண்டு வந்தால், கழுத்தில் உள்ள கருமை வேகமாக நீங்கும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி

தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையான இடத்தில் தடவி 30-35 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கழுத்தில் இருக்கும் கருப்பு படலம் விரைவில் மறையும்.

எலுமிச்சை, ஆலிவ் ஆயில் மற்றும் தேன்

1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி மசாஜ் செய்து 25-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமை நீங்கும்.

19 1461046359 5 recipe5

Related posts

பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள் !!

nathan

கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்க இதை யூஸ் முயன்று பாருங்கள்!

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

பெண்கள் மணக்கோலத்தில் அழகாக ஜொலிக்க டிப்ஸ்

nathan

ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள்!!!

nathan

இதெல்லாம் முகத்துக்கு போட்டா அவ்ளோதான்? ஏன் தெரியுமா?

nathan

எல்லா வித சருமத்திற்கான பொருத்தமான டிப்ஸ்-உபயோகிச்சு பாருங்க

nathan

சரும பொலிவை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கலாம் வாசனை பவுடர்

nathan

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan