28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
Some ways to reduce stress in women SECVPF
பெண்கள் மருத்துவம்

பெண்கள் மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்

மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே அதிகம்.

பெண்கள் மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்
மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே அதிகம். பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களின் டென்ஷனை குறைக்க சில எளிய வழிமுறைகள்.

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.

* தவறாய் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
Some ways to reduce stress in women SECVPF

Related posts

ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

nathan

“இளவயதுக் கர்ப்பமும்” அதன் வேதனைகளும்

nathan

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

nathan

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika

வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

nathan

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு ம…

nathan

பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத உண்மைகள்!

nathan