
ஆரஞ்சு தோல் அரைத்து விழுது கால் டீஸ்பூன்,
கசகசா விழுது – 1 டீஸ்பூன்,
சந்தனப்பவுடர் – 2 சிட்டிகை…
இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் போல் பூசுங்கள், காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.
இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
சிலருக்கு கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும். அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்…
1 வேப்பங்கொழுந்துடன்,
ஆரஞ்சு தோல் விழுது – கால் டீஸ்பூன்,
கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து,
எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வர, கருமை ஓடிவிடும்.