25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
24 1448350544 5 rosemaryoil
தலைமுடி சிகிச்சை

பொடுகைப் போக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?

குளிர் அல்லது மழை காலங்களில் தலை முடி அதிகம் கொட்டும். தலை முடி கொட்டுவதற்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது மட்டுமின்றி, பொடுகுத் தொல்லையும் தான் முக்கிய காரணம்.

பொடுகு வருவதற்கு காரணம் தலையில் போதிய அளவில் ஈரப்பசை இல்லாதது தான். எனவே தலையில் ஈரப்பசையை உண்டாக்க நாம் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவுவோம். அப்படி வெறும் தேங்காய் எண்ணெயைத் தடவினால் மட்டும் போடுகு போகாது. அந்த தேங்காய் எண்ணெயை பலவிதமாக பயன்படுத்தினால் தான் பொடுகு நீங்கும்.

இங்கு பொடுகைப் போக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரவள்ளி எண்ணெய்

இந்த இரண்டு எண்ணெய்களிலும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் உள்ளது. இவைகளைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதற்கு 1 டீஸ்பூன் கற்பூரவள்ளி எண்ணெயில் 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்காப்பில் தடவி நன்கு 5-10 நிமிடம் மசாஜ் செய்து, ஊற வைத்து பின், மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு அலசினால், பொடுகு நீங்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம், ஸ்கால்ப்பின் pH அளவை சீராக பராமரிக்கும். எனவே அத்தகைய எலுமிச்சையின் சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதற்கு 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம்

கற்பூரம் கூட பொடுகினால் தலையில் ஏற்படும் அரிப்பைப் போக்கும். அதிலும் காற்றுப்புகாத பாட்டிலில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதில் கற்பூரத்தைப் போட்டு, தினமும் இரவில் படுக்கும் போது, அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வர, பொடுகுத் தொல்லை அகலும்.

தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் தயிர்

மேற்கூறிய மூன்றுமே பொடுகைப் போக்குவதில் சிறந்தவை. எனவே இந்த மூன்றையும் சரிசம அளவில் எடுத்துக் கொண்டு ஒன்றாக கலந்து, அதனை தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படுமாறு தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், விரைவில் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்

வறட்சியான தலைச்சருமத்தை சரிசெய்வதில் ரோஸ்மேரி எண்ணெய் மிகவும் சிறந்தது. இதற்கு அதில் உள்ள சேர்மங்கள் தான் காரணம். அத்தகைய ரோஸ்மேரி எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சரிசமஅளவில் எடுத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச, பொடுகு விரைவில் போகும்.

24 1448350544 5 rosemaryoil

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா?

nathan

இதைப் பயன்படுத்திய 2 நாட்களுக்குப் பின், சொட்டைத் தலையிலும் முடி வளரும் எனத் தெரியுமா?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? இதோ சில வழிகள்!

nathan

நரைமுடி, கூந்தல் உதிர்வை தடுக்க சீகைக்காய் போட்டு குளிக்க

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகுத் தொல்லையை விரட்டுவது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா நரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்!

nathan

பொடுகு என்றால் என்ன? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan