இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், திருமணமான மகன் இறந்தால், தாய் தன் மகனின் சொத்தில் பங்கு கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாகையைச் சேர்ந்த மோசஸ், 2012ல் இறந்தபோது, பவுலின் தாயார் மேரி, அவரது சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். தாய்க்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மோசஸின் மனைவி ஆக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர் மித்ர நேஷா நியமிக்கப்பட்டார், நீதிபதி சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 42ன்படி கணவர் இறந்தால் அவரது விதவை மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு இருக்கும் என்று வழக்கறிஞர் மித்ர நேஷா விளக்கம் அளித்தார்.