24.5 C
Chennai
Wednesday, Dec 25, 2024
%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B %E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
மருத்துவ குறிப்பு

குழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்குறிகளும் அதற்கான மருந்துகளும் என்ன என்று காண்போம் :

1. பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் – அகோனைட்

2. குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் – ஹெலிபோரஸ்

3. இருமல் வருமுன் கத்துதல் – ஆர்னிகா, அபிஸ்

4. நடக்கத் தாமதம் – நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்

5. நடக்கவும் பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால் – அகாரிகஸ்

6. நடக்கும்போது தடுமாற்றமும், கீழேயும் விழுந்தால் – காஸ்டிகம்

7. வளர்ச்சி குன்றியதால் பேசவும், நடக்கவும் தாமதம் – பாரிடாகார்ப்

8. தன்னைக் கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும் இருக்க விரும்புதல் – பல்சடில்லா

9. பல் முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால் தூக்கமின்மை – சிமிசிபியூகா

10. விளையாட விருப்பமில்லாமை – பாரிடாகார்ப்

11. தாய்ப்பால் மறந்ததனால் தூக்கமின்மை – பெல்லடோனா

12. திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது – ஸ்டாபிஸôக்ரியா

13. மூளையின்அதிக உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும் – சைபிரிடியம்

14. தூங்கும்போது முன் கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும். பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப் பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும் – சாமோமில்லா

15. தொடர் வாந்தி – மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்

16. தன்னைத் தூக்கவோ, உயரத் தூக்கவோ விரும்பாது – பிரையோனியா

17. பல்முளைக்கும் காலத்தில் மலச்சிக்கல் – மெக்மூர்

18. பிடிவாதமான மலச்சிக்கல் – பாரஃபின்

19. மிகக் குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல் – விராட்.ஆல்

20. சாதாரண மலச்சிக்கல் – அலுமினா, கோலினஸ், சோரினம்

21. செயற்கைப் பால் குடித்ததால் மலச்சிக்கல் – அலுமினா, நகஸ்வாமிகா

22. குழந்தை உரத்த கூச்சலுடன், உடல் முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுதல் – இக்னேசியா

23. குழந்தை தேம்பித் தேம்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப் பெருமூச்சு விடும் – இக்னேசியா

24. மன ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை – அகாரிகஸ்

25. தொண்டை வேக்காடு – அகோனைட்

26. சிறுவர் விரைகளில் நீர்க்கோர்வை, வீக்கம் – ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்

27. தொப்புளிலிருந்து இரத்தம் கசிதல் – அப்ரோடேனம், கல்.பாஸ்

28. குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்புகள் – ஆம்ராகிரிசா

29. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் – அப்ரோடனம், பெர்ரம், சிலிகா

30. பால் ஒத்துக் கொள்ளாது – எதுசாசைனாபியம்

31. திடீர் என்று கடுமையான வாந்தி – எதுசாசைனாபியம்

32. அன்பாகப் பேசினால் கத்தி அழும் – சிலிகா

33. ஆசனவாய்ப் பிதுக்கம் – போடோபில்லம்.

34. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல் – அகோனைட்

35. சிறுவர்களின் காலரா – எதுசாசைனாபியம், விராட்ஆல்பம், சரசபரில்லா, காம்பர்

36. பிறந்த குழந்தை மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல்- ஆண்டிடார்ட், காம்பர், லாராசரஸ்

37. ஆஸ்துமா – சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம்

38. காசநோய் இருமல் – பாரிடாமுர்

39. சீக்கிரம் வளருதல் – பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்

40. ஆசனவாயில் அரிப்புடன் பிதுக்கம் – பெர்ரம்மெட்

41. குழந்தை குறட்டை விடல் – சின்கோனா

42. தொப்புள் ஹெரினியா – நக்ஸ்வாமிகா

43. கொதித்த பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல் – செபியா

44. காமாலை – லுப்புலஸ், மைரிகா

45. நாடாப்பூச்சியை அகற்ற – கௌசோ, பிலிக்ஸ்மாஸ்

46. தன்னைத் தொடவோ, எடுக்கவோ பிடிக்காது – சீனா

47. ஆசனவாய் அரிப்பு – டுகுரியம்

48. வயிற்றில் கீரிப்பூச்சிகள் – நேட்.பாஸ், சபாடில், நாப்தா

49. குழந்தைக்குப் பேசினாலோ, அசைந்தாலோ இருமல் வந்திடுமோ என்ற பயம் – சீனா

50. கக்குவான் இருமல் – நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்

51. குழந்தையைத் தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும் – போரக்ஸ், ஜெல்சிமியம்

52. காது சம்பந்த நோய் – பல்ஸ், சாமோமில், ஜீங்கம்

53. வாய்ப்புண் – போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்

54. மூக்கடைப்பு – நகஸ்வாமிகா, லைகோபோடியம்

55. வயிறு சம்பந்த நோய் – பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி, சல்பர், அமிக்டலிஸ்பர்

56. வயிற்றின் கீழ் ஹெர்னியா – ஆரம்மெட்

57. மூலம், வலியால் தொடமுடியாமை – மூரியாடிக் ஆசிட்

58. வயிற்றுப்போக்கு – எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்

59. சொன்னால் கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும் – லேக்கானினம்

60. “புராங்கோ நிமோனியா” – டியூபர்குலின், ஸ்குல்லா

61. பள்ளி செல்லும் குழந்தைக்குத் தலைவலி – நேட்.மூர், கல்காரியா பாஸ்

62. நாட்பட்ட சளி மூக்கில் ஒழுகுதல் – மெடோரினம்

63. எவரும் தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது – குப்.மெட்

64. இருமலின் போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும் – ஸ்குல்லா, பல்ஸ், காஸ்டிகம்

65. தனியாகப் படுக்கச் செல்லாமல் கத்தும் – காஸ்டிகம்

66. இருமல் வரும்போது தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும் – நிக்கோலம்

67. பயங்கரப்பசி – நிக்கோலம்

68. பலமற்ற குழந்தை – சைனா

69. என்னவென்று தெரியாமலேயே பல பொருளை விரும்பிக் கேட்கும்; கொடுத்தால் மறுக்கும் – சீனா

70. தூக்கமின்மை – ஜிங்கம், வலேரினம்

71. பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும் குடிக்க விரும்பாமை – ஆன்டி.குருட்

72. பகலில் குடிக்க விரும்பும், இரவில் மறுக்கும்-அபிஸ்மெல்

73. மூளையில் நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத் தானாக அசைத்தல் – அபோசினம்

74. திறந்த வாயுடன், வாய்வழியே மூச்சுவிட்டுக் கொண்டு வருதல் – பாரிடாமூர்

75. முக்கியமாகக் கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் – அப்ரோடேனம்

76. தூக்கிக் கொள்ளச் செல்லும் – அசிடிக் ஆசிட்

77. தலையைத் தொட அனுமதிக்காது – அசிட்டிக் ஆசிட்

78. கோடை காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு – அகோனைட்

79. முட்டாள்தனம் – எதுசாசைனதபியம்

80. பல் முளைக்கும் காலத்தில் கோளாறு – எதுசாசைனதபியம்

81. வலி ஏற்படும் போது கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல் – எதுசாசைனதபியம்

82. சத்தான உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது – எதுசாசைனதபியம்

83. தயிர்போல் வாந்தி எடுத்தல் – எதுசாசைனதபியம்

84. பரிட்சை பயம் – அனகார்டியம்

85. பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் – பிக்ரிக் ஆசிட்

86. பரிட்சை என்றாலே மனமுடைதல் எதுசா – சைனாபியம்

87. படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை நிலை நிறுத்தாமை – அபிஸ், ரேம்னஸ் கலிபோர்னிகா

88. சட்டி போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி – ஸ்டாபிஸôகரியா

89. பகலில் நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும்- ஜலப்பா

90. காசநோய் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட – ஆர்ச ஐயோடைட்

91. சிபிலிஸ் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட – காலி ஐயோட், ஆரம்மெட்

92. வயிற்றுப்போக்கு பச்சை நிறம் – மெர்க்.சோல், மெர்க்.கரோ

93. வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம் – இபிகாக்

94. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம், பரபரப்பு, தாகம் – அகோனைட்

95. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல் – அர்ஜ்.நைட்

96. வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது- பெல்லடோனா

97. தன் நிழலைக் கண்டுபயப்படுதல் – லைக்கோபோடியம்

98. தூங்கும்போது காதுகளைக் குடையும் – சிலிகா

99. வயிற்றுப்போக்கால் உடலில் நீர் வறட்சி – சைனா

100. இரத்தசோகை – பெர்ரம்மெட், பல்ஸ்

101. பாலை ஜீரணிக்க முடியாமை – மெக்மூர்

102. இருமும் போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் – ஐயோடைம்

103. உடலில் புளிப்பு வாடை இருத்தல் – மெக்.கார்ப்

104. தூங்கி எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண், மூக்கு தேய்த்தல் – சானிகுலா

105. குழந்தைகளின் எடை கூட, மனம் உடல் நலம் பெற – ஆல்பால்பா.

106. தூக்கத்தில் நடத்தல் – காலி புரோம்

107. வளர்ச்சி குன்றல் – லைகோ.போடியம்

108. பயத்துடன் குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும் – சல்பர்

109. உணர்வைத் தூண்டும் தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி-நக்ஸ்வாமிகா

110. நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும் அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும் இரவில் அழுது கொண்டு இருத்தல் – சோரினம்

111. பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால் கேட்காமல், திட்டவும் உதைக்கவும் செய்யவும், தாயைப் பிடித்துக் கொண்டு தொல்லை தரும். -லைகோபோடியம்

112. தோளின் குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் – ஸடேனம்

113. இரவில் போர்வையை உதைத்துத் தள்ளும் – சானிகுலா

114. நகங்களைக் கடித்தல் – ஆர்சி.ஆல், அகோனைட்

115. மூக்கில் விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல் – ஆரம்டிரிப்

116. தலைவலியின் போது கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும் – ஆரம்டிரிப்

117. அதிப் பிடிவாதம், அடஙகாமை – ஆரம்டிரிப்

118. பாலு உணர்வு – ஆலோ

119. பிறர் முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல் – ஆம்பிரா

120. இனிப்பு மேல் ஆவல் – அர்ஜெண்ட்.நைட்

121. தன்னையே வருத்திக் கொண்டு, முடியை இழுத்துக் கொள்ளும் – ஆர்ச்.ஆல், பெல்லடோனா

122. தூக்கத்தில் தூக்கிப் போடுதல் – பெல்லடோனா

123. காலராவில் உடல் சூடாயிருத்தல் – பிஸ்மத்

124. சூடான தலை – போரக்ஸ்

125. மிருகம் மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம் – புபோ

126. தூங்கும் போது மூச்சு அடைக்கும் – கல்.பாஸ், போரக்ஸ்

127. இரவு பகல் அழுதல் – ஓபியம்

128. பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப் பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு – இக்னேசியா

129. பலவீனமான குழந்தை அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ இசிவு வரும் – கபியா

130. முடியைப் பிடித்து இழுக்கும், தலையில் அடித்துக் கொள்ளும் – டுபர்குளினம்

131. மூக்கு அழுக்கு நிறைந்து இருக்கும் – மெர்க்குரியஸ்

132. தூங்க ஆரம்பித்தும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் – கிரியோசோட், செபியா

133. 16 மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை – சானிகுலா

134. தனக்கு எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில் வைத்தல் – சல்பர்

135. இருட்டைக் கண்டால் பயம் – ஸ்டிரமோனியம்

136. சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை – ஸ்டாபி சாகிரியா, லேடம்

137. பிறந்தவுடன் கத்துதல், பிறந்ததில் இருந்து கத்திக் கொண்டே இருத்தல் – சிபிலினம்

138. கைகள் சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல் – டாரன்டுலா

139. தலையைச் சுவரில் தானாகவே முட்டிக் கொள்ளுதல் – சிபிலினம், மில்லிபோலியம்

140. கோபப்படும் போது மூச்சு அடைத்தல் – ஆர்னிகா

141. குழந்தையின் தலையை மூடினால் பிடிக்காது – பெர்ரம்பாஸ்

%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

Related posts

தலைமுடியை வலிமையாக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?

nathan

தலைவலியை உடனேயே தீர்க்கும் எளிய வீட்டு மருத்துவம்!இதை முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் சிறந்த உணவுப்பொருட்கள்

nathan

உங்கள் மகள் காதல்வசப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

nathan

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்

nathan

பெண்களே மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எப்படி தெரியுமா?

nathan

கருமுட்டையைச் சேமித்து… 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’!

nathan

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

nathan