29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
15 1460695050 8 soup
தொப்பை குறைய

தொப்பையைக் குறைக்க நினைப்போர் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் இன்றைய நவீன மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு விற்கப்படும் உணவுகளைப் பார்த்துக் கொண்டு, டயட்டில் இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். கட்டுப்பாடு என்ற ஒன்றை எடையைக் குறைக்கும் போது கவனத்தில் கொண்டு இருந்தாலே போதும், விரைவில் எடையைக் குறைக்கலாம்.

டயட் என்பது சாப்பிடாமல் இருப்பதல்ல. சரியான வேளையில், சரியான அளவில், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதே டயட் ஆகும். அதில் குறிப்பாக பலர் செய்யும் தவறு காலை உணவைத் தவிர்ப்பது. காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் ஒருவர் செயல்பட காலை உணவு மிகவும் அவசியம்.

அதிலும் எடையைக் குறைக்க நினைப்போர் உண்ணும் காலை உணவில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கலோரிகள் குறைவான அளவிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இங்கு உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கான கலோரிகள் குறைவாக சில காலை உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓட்ஸ்

தற்போது ஓட்ஸ் மிகவும் பிரபலமான ஓர் உணவுப் பொருளாக உள்ளது. இதற்கு இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பது தான் காரணம். இதனால் இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற ஓர் காலை உணவுப் பொருளாக உள்ளது.

ஓட்ஸ் சாப்பிடும் முறை

1/4 கப் ஓட்ஸ் உடன் 1/2 கப் சூடான பால், சிறிது தேன் மற்றும் நறுக்கிய ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, கருப்பு திராட்சை மற்றும் செர்ரி போன்ற பழங்களை சேர்த்து காலையில் உட்கொள்ள வேண்டும்.

ஆம்லெட் மற்றும் க்ரீன் டீ

முட்டையில் கலோரிகள் குறைவாகவும், ஆரோக்கியமான புரோட்டீன் அதிகமாகவும் உள்ளது. இதனை காலையில் உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். ஒரு பெரிய முட்டையில் 78 கலோரிகள் உள்ளது. மேலும் க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை வேகமாக குறைய உதவும்.

உட்கொள்ளும் முறை

2 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அதில் சிறிது வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அடித்து, பின் ஆம்லெட் ஊற்றி சாப்பிட வேண்டும். அத்துடன் ஒரு டம்ளர் சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த்த க்ரீன் டீயைப் பருக வேண்டும்.

இட்லி சாம்பார்

தென்னிந்தியாவின் ஸ்பெஷல் காலை உணவே இட்லி சாம்பார் தான். எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் 2 இட்லியை சாம்பார் ஊற்றி சாப்பிட வேண்டும். இந்த காலை உணவில் 230 கலோரிகள் உள்ளது.

ஆப்பிள் ஸ்மூத்தி மற்றும் பாதாம்

ஆப்பிள் ஸ்மூத்தியும் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற ஓர் சிறந்த காலை உணவு. அதிலும் 2 ஆப்பிளை மிக்ஸியில் போட்டு, 1 கப் பால் ஊற்றி, சிறிது தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து நன்கு அடித்து பருக வேண்டும். பின் அதோடு 9-10 பாதாமை உட்கொள்ள வேண்டும்.

கார்ன் ப்ளேக்ஸ்

ஒருவேளை உங்களுக்கு காலையில் சாப்பிட நேரம் இல்லாத போது, ஒரு பௌலில் ப்ளைன் கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் 1/2 கப் பால் பால் ஊற்றி, உலர் பழங்களை சேர்த்து உட்கொள்ளலாம். இந்த காலை உணவில் 200 கலோரிகள் உள்ளது.

வெஜிடேபிள் சூப் மற்றும் ப்ரௌன் பிரட்

எடையைக் குறைக்க நினைப்போர் சூப் அதிகம் குடிப்பது நல்லது. அதிலும் காய்கறிகளை சேர்த்து சூப் செய்து காலையில் ஒரு கப் குடித்து, அத்துடன் 1 துண்டு டோஸ்ட் செய்த ப்ரௌன் பிரட் சாப்பிட்டு, அன்றைய நாளை ஆரம்பிப்பது அற்புதமாக இருக்கும். இந்த காலை உணவிலும் 200 கலோரிகள் இருக்கும்.

15 1460695050 8 soup

Related posts

7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை!

nathan

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

nathan

உங்க தொப்பை மாயமாய் மறைய வேண்டுமா? இந்த கசப்பு பானத்தை கண்ண மூடிட்டு குடிங்க போதும்…!

nathan

மூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்!

nathan

விரைவில் தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா….!

nathan

பெண்களின் வயிற்று சதை குறைய…..! – Tips to reduce Tummy

nathan

தொப்பையை மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க..

nathan

தொப்பை குறைய உதவும் ஸ்விஸ் பந்து பயிற்சி

nathan

தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? தெரிஞ்சிக்கங்க…

nathan