30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
Other News

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்

நடிகை ஐஸ்வர்யா ராயை புண்படுத்தும் வகையில் பேசியதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்தில் பேசிய ரசாக், “நேற்று கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகம் குறித்து விவாதித்தோம், அங்கு தற்செயலாக ஐஸ்வர்யா ராயின் பெயரை குறிப்பிட்டேன். தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நான் நினைக்கவில்லை.

முன்னதாக பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் ரஸாக் பேசும்போது, “பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் இதனை சிரித்து கைதட்டி ரசித்தனர்.

அப்துல் ரசாக்கின் மோசமான கருத்துக்காக நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடியுள்ளனர். இது ஒரு மோசமான உதாரணம் என்று ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் அப்துல் ரசாக் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

Related posts

Ajithkumar Car Race: துபாய் ரேஸில் அஜித் அணி அபார வெற்றி! 3வது இடம்

nathan

கள்ளக்காதலனுடன் உல்லாசம் -நேரில் பார்த்த கணவர்

nathan

21ஆம் திகதி முதல்… கனடா வழங்கும் Visa

nathan

ராகவா லாரன்ஸ் தாய்க்கு கட்டிய கோவிலின் புகைப்படங்கள்

nathan

டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா

nathan

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்..

nathan

இந்த 5 ராசி ஆண்கள் மனைவிக்கு எப்போதும் நேர்மையான கணவர்களாக இருப்பார்களாம்…

nathan

பிகினியில் சூடேற்றிய பிரபல நடிகை!

nathan

பாக்யராஜ் முதல் மனைவி யார் தெரியுமா?

nathan