27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D 1
பெண்கள் மருத்துவம்

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான 5 காரணங்கள்

பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும்.

மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

* சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

* திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.

* பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.

* தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.

* அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D 1

Related posts

மாதவிடாய் உதிரம் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்

nathan

முப்பதை தாண்டாதீங்க..

nathan

பெண்களின் வயிற்று கொழுப்பு காரணம்

nathan

அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

nathan

கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை….

nathan

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

பெர்சனல்… கொஞ்சம்..!

nathan

உஷாரா இருங்க…! உண்மையில் தூங்கும்போது பெண்கள் ப்ரா அணியலாமா கூடாதா ?

nathan

Home Remedies for Breast Enlargement – மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan