25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ginger pepper chicken 16 1460794979
அசைவ வகைகள்

இஞ்சி பெப்பர் சிக்கன்

விடுமுறை நாள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நன்கு வாய்க்கு சுவையாக பிடித்த சமையலை சமைத்து சாப்பிட முடியும். அதில் பெரும்பாலானோர் அசைவ உணவைத் தான் செய்து சுவைப்பார்கள். இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைத்தால், இஞ்சி பெப்பர் சிக்கன் செய்யுங்கள்.

இங்கு அந்த இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 (நறுக்கியது) கொத்தமல்லி – சிறிது இஞ்சி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சோம்பு – 1 டீஸ்பூன் பட்டை – 2 இன்ச் சோயா சாஸ் – 1 டீஸ்பூன் வினிகர் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, சிக்கனைப் போட்டு, உப்பு சிறிது தூசி பிரட்டி 20 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். பிறகு மூடியைத் திறந்து, சிக்கனை பிரட்டி, அத்துடன் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி, தீயை அதிகரித்து, தண்ணீர் முற்றிலும் வற்றியதும், மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், இஞ்சி பெப்பர் சிக்கன் ரெடி!!!

ginger pepper chicken 16 1460794979

Related posts

சில்லி முட்டை

nathan

சுவையான மங்களூரியன் சிக்கன் குழம்பு

nathan

சுவையான திருக்கை மீன் குழம்பு

nathan

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

டின் மீன் கறி

nathan

ருசியான… சிக்கன் பக்கோடா

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65

nathan