பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் தனது 80வது வயதில் காலமானார்.
80 வயதான சந்திரமோகன் தமிழில் ‘நீயா’ படத்தில் இச்சாதாரி பாம்பாவாக நடித்தார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான இவர் தமிழில் நாளை நமதே, நீயா, டைம், சகுனி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சந்திரமோகன் 900க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சந்திரமோகன் சமீபகாலமாக சில உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சந்திரமோகனின் மறைவால் திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பமிடிமுக்காலா கிராமத்தில் பிறந்த சந்திரமோகன், தனது நடிப்பிற்காக இரண்டு முறை சிறந்த குணச்சித்திர நடிகருக்கான நந்தி விருதையும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருதையும், சிறந்த திரைப்பட விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.