32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
1699618553 pradeep 2
Other News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப்! இந்த முடிவு நியாயமற்றது

பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 இல், போட்டியாளர்கள் மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, நிக்சன், சரவணன், கூல் சுரேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் பேசினர் மற்றும் சக போட்டியாளர் பிரதீப் ஆண்டனி பெண்களை பாதுகாக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இதைக் கேட்ட தொகுப்பாளர் கமல்ஹாசன், பிரதீப்பை வீட்டை விட்டு வெளியே துரத்தினார். இந்த முடிவு நியாயமற்றது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதீப் ஆண்டனி தனது X தளத்தில் கூறியிருப்பாவது, “நீங்கள் எனக்கு நல்ல விளையாட்டைக் கொடுத்தால் நான் சிறப்பான முறையில் விளையாடுவேன். நிகழ்ச்சியில் நான் முறையாக நடந்து கொள்வேன் என சத்தியம் செய்கிறேன். ஒரு படத்தின் இடைவெளி முடித்து வரும் 2ம் பாதி போல பழிவாங்கி விளையாடுவேன்” எனக் குறிப்பிட்டு டிவி, கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.

அதற்கு அடுத்த பதிவில், ”எண்டமால் நிறுவனம் என்னை மீண்டும் உள்ளே அனுப்புவது குறித்து யோசித்தால், எனக்கு 2 போட்டியாளர்களை வெளியே அனுப்புவதற்கான 2 ரெட் கார்ட்டுகள் வேண்டும், பிக் பாஸ் போட்டியில் நான் கேப்டனாக வேண்டும்” என நிபந்தனைகளும் விதித்துள்ளார்.

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

 

Related posts

வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோ

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள்!!!

nathan

இறப்பதற்கு முதல் நாள் கதறி அழுத சில்க்.. நடந்தது என்ன தெரியுமா?

nathan

கழிப்பறையில் பிறந்த குழந்தை-கள்ளக் காதலனால் கர்ப்பம்..

nathan

மற்றவர்கள் மீது நம்பிக்கை அற்ற 3 ராசியினர்…

nathan

மனைவியின் தலையைத் துண்டாக்கி எடுத்துச் சென்ற கணவர்..

nathan

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி

nathan

வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்

nathan