தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை – 1 கப்
* சர்க்கரை – 1/2 கப்
* நெய் – 3 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வறுத்த வேர்க்கடலையில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். வேர்க்கடலையை அரைக்கும் போது மிகவும் வேகமாக அரைக்காமல், மிதமான வேகத்தில் அரைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது எண்ணெயை வெளியிட்டு, பேஸ்ட் போல் ஆகிவிடும்.
* பின்பு ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையை சேர்த்து, நீரை ஊற்றி, சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து, பாகு கம்பி பதத்திற்கு வரும் போது, குறைவான தீயில் வைத்து, வேர்க்கடலை பொடியை கொஞ்சம் கொஞ்சமாக தூவி நன்கு 5 நிமிடம் தொடர்ந்து கிளற வேண்டும்.
Diwali Special Peanut Katli Recipe In Tamil
* பின் நெய்யை ஊற்றி கிளறவும். அப்படி கிளறும் போது, கலவையானது பேனில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்படி திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது பட்டர் பேப்பரில் நெய்யை தடவி, அதில் இந்த வேர்க்கடலை கலவையை வைத்து, அதன் மேல் மற்றொரு பிளாஸ்டிக் கவர் அல்லது பட்டர் பேப்பரை வைத்து, சப்பாத்தி உருட்டும் கட்டையால் 1/4 இன்ச் தடிமன் அளவிற்கு தேய்க்க வேண்டும்.
* பிறகு மேலே உள்ள கவர் அல்லது பேப்பரை எடுத்துவிட்டு, உடனே கத்தியால் வேண்டிய வடிவங்களில் வெட்டி எடுத்துக் கொண்டால், சுவையான வேக்கடலை கட்லி தயார்.
குறிப்பு:
* வறுத்த வேர்க்கடலை இல்லாவிட்டால், பச்சை வேர்க்கடலையை வாங்கி அதை வறுத்து பயன்படுத்தலாம்.
* வேர்க்கடலை கட்லியின் சுவையை அதிகரிக்க வேண்டுமானால், வீட்டில் பால் பவுடர் இருந்தால், அதில் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.