ஒரே போட்டியில் ஷமி செய்த பல வரலாற்று சாதனைகள்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை கேப்டன் குசல் மெண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன் சப்மேன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் 82 ரன்களும் எடுக்க, இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் குவித்தது. 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், முகமது சிராஜ் மற்றும் ஷமி அடுத்தடுத்து பந்துவீசி இலங்கையை பீதிக்குள்ளாக்கியது. சிராஜ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி மொத்த எண்ணிக்கையை மூன்றாகக் கொண்டு சென்றது, இறுதியில் தோன்றி பந்துவீச்சை மிரட்டிய ஷமி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஒரே போட்டியில் ஷமி செய்த பல வரலாற்று சாதனைகள்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரான முகமது ஷமி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உலக கோப்பையில் இந்திய அணிக்காக பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்தார். அவரது சாதனைகளைப் பார்ப்போம்.
* 45 உலகக்கோப்பை விக்கெட்டுகள்:
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக மாறி வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இந்திய பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான் (44) மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத்தை (44) பின்னுக்கு தள்ளி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் ஷமி.
Mohammed Shami
Mohammed Shami
* அதிகமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை:
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதை அடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராக ஷமி சாதனை படைத்துள்ளார். 4 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ஷமி, 3 முறை அதை செய்திருந்த ஹர்பஜன் சிங் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத்தை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.
* உலகக்கோப்பையில் அதிகமுறை 5 விக்கெட்டுகள்:
உலகக்கோப்பையை பொறுத்தவரையில் 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் முகமது ஷமி, அதிகமுறை அதை செய்திருந்த மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
Mohammed Shami
Mohammed Shami
*6 முறை 4 விக்கெட்டுகள்:
கடந்த 3 உலகக்கோப்பை போட்டிகளாக அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் முகமது ஷமி, அதிகமுறை இதை செய்த ஒரே பவுலராக மாறி சாதனை படைத்துள்ளார்.
* தொடர்ச்சியாக 3 முறை 4 விக்கெட்டுகள்:
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முகமது ஷமி மட்டுமே தொடர்ச்சியாக 3 முறை 4 விக்கெட்டுகளை இரண்டு முறை பதிவுசெய்த முதல் இந்திய பந்துவீச்சாளராகும். இவர் ஏற்கனவே 2019 உலகக்கோப்பையிலும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இதை மூன்று செய்துகாட்டிய வாஹிர் யூனிஸ்க்கு பிறகு, இரண்டு முறை நிகழ்த்திய ஒரே உலக பந்துவீச்சாளரும் ஷமி மட்டுமே.