26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
நகைச்சுவை நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்
Other News

நகைச்சுவை நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் தமிழில் வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன் (27). சு சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மிருதன் போன்ற படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.

 

பின்னர் உயர் படிப்பைத் தொடர பல வருடங்கள் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுத்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நடிகை லட்சுமி மேனன், யோகி பாபுவின் மனைவியாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

எனவே, யோகி பாபு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படமும் கிராமத்து பின்னணியில் உருவாகும் என்று தெரிகிறது. தற்போது இப்படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள் பலரும் யோகி பாபு மற்றும் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

ஷாலினிக்கு முன்பு நடிகையை பெண் கேட்டு சென்ற அஜித்!.

nathan

வைரலாகும் அனிதா சம்பத்தின் வீடியோ..!

nathan

பிரபல இசையமைப்பாளர் கார் விபத்தில் பலி… சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

nathan

சீமானுடன் குத்துச் சண்டைக்கு பூவை கணேசன் ரெடி: இடம், தேதியை அறிவித்த வீரலட்சுமி

nathan

சுந்தர் பிச்சை சம்பளம் இத்தனை கோடியா…?

nathan

ரீல்ஸ் செய்யாதே, கண்டித்த கணவன்: கழுத்தை நெரித்து கொன்ற மனைவி!!

nathan

கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் -குரு கதவை தட்டுகிறார்..

nathan

ஆனந்த் அம்பானி கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்- இவ்வளோ கோடியா, என்ன கொடுத்தாருன்னு பாருங்க

nathan

சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: ராசிகளுக்கு ஆபத்து..

nathan