28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ee
பெண்கள் மருத்துவம்

மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்..!

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று. அதிலும் ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும். இது தவிர வாந்தி, செரிமானக் கோளாறு என ஐந்து நாளும் நரகம்தான். அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் ஓய்வுக்கே நேரமில்லாமல் பரபரவென்று ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

அதனால் மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை ஃபாலோ செய்வது முக்கியம்.

ee

1. நிறைய தண்ணீர் குடியுங்கள்!

பலர் பீரியட்ஸின் போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து, அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் குடிக்கலாம்.

2. கால்சியம் சேர்த்துக் கொள்ளுங்கள்

அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், கிராம்ப்ஸ் புடித்து அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.

3. சாக்லேட் சாப்பிடுங்கள்

நாம் மகிழ்ச்சியாகவும், டென்ஷன் இல்லாமலும் இருக்க மூளையில் செரட்டோனின் என்ற அமிலச்சுரப்பு அவசியம். டார்க் சாக்லேட்டுகளைச் சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் டென்ஷன், பதட்டம் குறைய சாக்லேட் சாப்பிடுங்கள்.

girl drinking bottled water

4. அதிக கொழுப்பு வேண்டாம்

அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

5. ஃபைபர் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள். சாப்பிடாமல் இருப்பதால் கிராம்ப்ஸ்தான் அதிகம் வரும் . அதனால் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள ஃபீல் ஃப்ரீயாக உணருவீர்கள்.

6. வைட்டமின்களை தவிர்க்காதீர்கள்

வைட்டமின் பி6 நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ – ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக, மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

Related posts

கர்பத்தை தடுக்கும் நீர்க்கட்டிக்கு தீர்வு

nathan

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

nathan

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

sangika

கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணி…..

sangika

கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதற்கான சில டிப்ஸ்..

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்கள் பர்ஸில் இதனை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! பணம் கொழிக்கும்!

nathan

ஆய்வு முடிவுகள்.!பாவாடை கட்டினால் புற்று நோயா.?

nathan

உள்ளாடை அணியும் போது கவனிக்க வேண்டியவை…..

sangika

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

nathan