23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
12 1460437960 2 anant ambani
எடை குறைய

18 மாதத்தில் 108 கிலோ எடையை ஆனந்த் அம்பானி எப்படி குறைத்தார் என்று தெரியுமா?

ஒவ்வொருவருக்குள்ளும் அம்பானி போன்று பெரிய பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தான் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும், அவரது மகனின் நிலையைக் கண்டு அஞ்சத்தில் தான் இருந்திருப்பார். ஏனெனில் அவரது மகனான ஆனந்த் அம்பானி உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு வந்தார்.

ஆனால் தற்போது ஆனந்த் அம்பானி பலரும் நம்பமுடியாத அளவில் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறியுள்ளார். இதற்கு அவரது தன்னம்பிக்கையுடன் சொந்த முயற்சியும், கடின உழைப்பும் தான் காரணம்.

சரி, இவர் எப்படி உடல் பருமனடைந்தார், பின் எப்படி 18 மாதத்தில் உடல் எடையைக் குறைத்தார், அந்த ஃபிட்னஸ் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உடல் பருமனுக்கான காரணம்

ஆனந்த் அம்பானி பிறப்பில் குண்டாக இல்லை. ஆனால் இவருக்கு நாள்பட்ட ஆஸ்துமா இருந்ததால், அதற்காக எடுத்து வந்த மருந்து மாத்திரைகள் அவரது உடல் எடையை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் தான் இவர் இவ்வளவு குண்டாக இருந்துள்ளார்.

எவ்வளவு கிலோ எடையைக் குறைத்துள்ளார்?

ஆனந்த் அம்பானி 18 மாதங்களில் 108 கிலோ எடையைக் குறைத்துள்ளார். அதாவது ஒரு மாதத்திற்கு 6 கிலோ என்று ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைத்துள்ளார். உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், முதலில் நோயெதிர்ப்பு மண்டலம் தான் பாதிக்கப்படும். ஆகவே ஆனந்த் அம்பானி சரியான வழியைத் தேர்ந்தெடுத்து, இயற்கை வழியில் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

லோ கார்போஹைட்ரேட் டயட்

ஆனந்த் அம்பானி கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை உட்கொண்டதோடு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து வந்தார். எடையைக் குறைக்க இவர் பிரட், அரிசி உணவுகள், சர்க்கரை கலந்த உணவுகள், குளிர்பானங்கள் என்று எதையும் பருகவில்லையாம். மேலும் இவர் எடையைக் குறைக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளையும், ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளையும் தான் உட்கொண்டு வந்தாராம்.

நடைப்பயிற்சி

ஆனந்த் அம்பானி தினமும் 21 கிலோமீட்டர் வரை நடைப்பயிற்சியை மேற்கொண்டாராம். பொதுவாக இவ்வளவு தூரத்தை மெதுவாக நடந்தாலும் 3 1/2 மணிநேரம் ஆகும். சாதாரணமாக 10 நிமிடம் நடந்தாலே சோர்வடைவோம். ஆனால் ஆனந்த தனது குறிக்கோளில் உறுதியுடன் இருந்து, தற்போது உடல் எடையைக் குறைத்து வெற்றித் தழுவியுள்ளார்.

யோகா

என்ன தான் டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், யோகா செய்வதன் மூலம், மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, குறிக்கோளின் மீது முழு கவனத்தையும் செலுத்த உதவும். அதை ஆனந்த் நன்கு உணர்ந்து, உடற்பயிற்சியுடன் தினமும் யோகா பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

வெயிட் ட்ரெயினிங்

தற்போது வெயிட் ட்ரெயினிங் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இதனை மேற்கொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களும் வேகமாக குறையும்.

ஃபங்ஷனல் ட்ரெயினிங்

ஃபங்ஷனல் ட்ரெயினிங் என்பது ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகளாகும். இதில் ஸ்குவாட்ஸ், ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகள் போன்றவை அடங்கும். இந்த பயிற்சிகளை முறையான பயிற்சியாளரின் உதவியுடன் கற்றுக் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

12 1460437960 2 anant ambani

Related posts

நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

nathan

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து

nathan

பெண்களின் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்

nathan

கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி டிராகன் பழம் சாப்பிடலாம்

nathan

அதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan

உடல் எடை குறைய எளிய மருத்துவம்

nathan

எடை குறைய சில சுவையான உணவுகள்

nathan

எடையைக் குறைக்க என்ன வழி?

nathan

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

nathan