28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ie2fyv8
மருத்துவ குறிப்பு

உதிரப் போக்கின் போது வயிற்று வலியை தவிர்ப்பது எப்படி?

உதிரப் போக்கின் போது ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் அதிகம். இதற்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர் வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம். பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை கருவுற காத்திருந்தும் ஏற்படாத நிலையில் கருமுட்டை பதிந்திருக்கும் இடத்திலிருந்து ரத்தத்துடன் வெளியேறும் இயற்கை நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக சிலருக்கு அதிகவலியுடன் ஏற்படுவதையே உதிரப்போக்கு என்கிறோம்.

இயல்பாக மாதவிலக்கின் போது வலி, சோர்வு இருப்பது இயல்பே. ஒரு வாரத்திற்கு மேல் வலியுடன் பல முறை உதிரப்போக்கு இருப்பவர்கள் கண்டிப்பாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அறிகுறி:

ஒரு மணி நேரத்தில் இரண்டுக்கு மேல் நாப்கின்களை பயன்படுத்த வேண்டியது வந்தாலோ, இரவிலும் அதிக உதிரப்போக்கு இருந்தாலோ, ரத்தகட்டிகள் தொடர்ந்து அதிகப்படியாக வந்தாலும், ஒழுங்காக தினசரி வேலைகளை கவனிக்க முடியாமலும், ரத்தசோகை, சோர்வு, பலவீனம் ஆகியவைகள் முக்கிய அறிகுறிகள்.

காரணம் என்ன?:

ஈஸ்டிரோஜன், புரோஜற்றினான் ஹார்மோன்களில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் போது, முட்டை பையிலிருந்து முட்டை வெளிப்படாததால் ரத்தம் மட்டும் வெளியேறுகிறது.

சினைப்பையில்p.c.o.(நீர்க்கட்டிகள்), பைபிராய்டு கட்டிகள் (புற்றுநோய் இல்லாத கட்டிகள்), கரு முட்டைபை, கர்ப்பப்பை புற்றுநோய், கருச்சிதைவு, கருமுட்டை பெலோப்பியன் குழாயில் தங்கினாலும் உதிரப்போக்கு ஏற்படும். கருத்தடை சாதனங்களினால் ஏற்படும் அலர்ச்சி, அடினோமயோசிஸ், pid ஆகிய பிரச்னைகள் இருந்தாலும் ஏற்படும். வைட்டமின் கே குறைவால் ரத்தம் சரியாக உறையாமை, தைராய்டு நோய், சிறுநீரக, கல்லீரல் நோய் ஆகிய சூழ்நிலைகளிலும் உதிரப்போக்கு அரிதாய் காணப்படும்.

கண்டறியும் முறை:

அல்ட்ராஸ்கேன் மற்றும் ரத்தசோகை, தைராய்டு, ரத்தத்தின் உறைநிலை ஆகிய ரத்த பரிசோதனைகள். pap டெஸ்ட்செர் விக்ஸ் பகுதியில் உள்ள தசையை எடுத்து நோய் தொற்று கண்டறிதல். எண்டோ மெற்றியல் பயாப்சி மூலம் புற்றுநோய் உள்ளதா என்பதனை கண்டறிதல்.

சிகிச்சை எப்போது தேவை?:

குறைந்த நேரத்தில் அதிக உதிரப்போக்கு, சீராகரத்த போக்கில்லாத போது, மெனோபாஸ் ஆன பின்பும் உதிரப்போக்கு தொடர்ந்தால், அதிக ரத்த போக்குடன் வயிற்றுப்போக்கு, வாந்தி, ரத்தசோகை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி சிகிச்சை தேவை.

விளைவுகள்:

இரும்பு சத்து குறைபாடுள்ள ரத்த சோகை, தாங்க முடியாத வலி, கரு முட்டை வெளியில் வராது. இரத்த சோகையினால் பலகீனம், உடல் சோர்வு, கைகள் மரத்து போதல், தலைவலி, மனஅழுத்தம், காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும்.

சிகிச்சை:

காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஹார்மோன் மாத்திரைகளான புரோஜஸ்டிரான், NSAIDS மாத்திரைகள் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம். கர்ப்பபை கட்டிகளை ஷர்மோனல் மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். உதிரப்போக்கு அறவே நிற்காத பட்சத்தில் டி அன்ட் சி மூலம் சரி செய்யலாம். மேற்கண்ட சிகிச்சை எதுவும் பயன் தராவிட்டால் கர்ப்பபை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

மூலிகை சிகிச்சை:

அசோகா,தாத்ரி பூ, கோரைக்கிழங்கு, நாககேசரம், சுக்கு, சீரகம், ஆடாதொடை, சந்தனம், கொடுவேலி, பட்டை, ஏலக்காய், நாவல், நிலவேம்பு, கடுகு ரோகினி, தாமரை, இலுப்பை, அர்சுன பட்டை, திப்பிலி, இந்துப்பு, மஞ்சள், கொத்தமல்லி, குகுலு போன்ற மூலிகைகளை உள்ளடக்கி தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் பயன்தருகிறது.

உணவு மற்றும் பழக்க வழக்கம்:

நார்ச்சத்துள்ள உணவுகள், தண்ணீர் போதுமான அளவு உட்கொள்ளல், உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளான உப்பு, கார உணவுகளை தவிர்க்க வேண்டும். மீன் எண்ணெய், மெக்னீசியம் தாது அதிகம் உள்ள எள்ளு, பூசணிக்காய், இரும்புசத்து அதிகமுள்ள வாழைப்பூ, உருளைக்கிழங்கு, கரும்புச்சாறு, வாழைப்பழம், திராட்சை, மாதுளை, தர்பூசணி, பேரீச்சை போன்ற உணவுகளை சாப்பிட்டாலே உதிரப்போக்கு நோயிலிருந்து விடுபடலாம்.

மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய்கறி, கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும். மனதிற்கு அமைதியும், உடலுக்கு ஓய்வும் கொடுக்க வேண்டும். மன அழுத்தம் கோபம் போன்றவை குறைக்கா விட்டால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். டீ, மதுபானம், காபி தவிர்க்க வேண்டும். தலையணை இன்றி கால்களை உயர்த்தி படுக்க வேண்டும். சிறிது உடற்பயிற்சி, நீச்சல் செய்யலாம். தியானம், யோகா இதற்கு நல்லது.

வீட்டு வைத்தியம்:

மூங்கில் இலை, மாங்காய் பட்டை, இஞ்சி, மல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். கடுகு பாலுடன், வாழைப்பூ தயிருடன், விளாம்பழம் இலை மற்றும் துளசி விழுதுகளை சாப்பிடலாம். நமது உடலில் உள்ள ரத்தத்தை பாதுகாத்து 70 சதவீத அளவையாவது தக்க வைத்தால் மட்டுமே உயிரை பாதுகாக்க முடியும். உதிரம் இருக்கும் வரை தான் உயிர் இருக்கும். ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் சென்று தேவையான சத்துக்களை தந்து வாழ வைக்கிகிறது.

ie2fyv8

Related posts

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா?இதோ எளிய நிவாரணம்

nathan

மாதக்கடைசியில் பணம் இல்லாமல் அவதியா? இதோ ஐடியா

nathan

தெரிஞ்சிக்கங்க… தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இங்க ஒரு நிமிஷம் அழுத்தம் கொடுங்க…

nathan

30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

nathan

அகத்திக்கீரை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளிடம் பேசினால் மூளை வளரும்

nathan

மாதவிடாய் பெரும்போக்கு கட்டுப்படுத்த!

nathan

வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்ல, அழுதாலும் நோய்விட்டு போகும் – எப்படின்னு தெரியுமா???

nathan