27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
1460540992 9736
மருத்துவ குறிப்பு

ஆண்மை பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை வயாகரா அமுக்கிராகிழங்கு

மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு.

இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள்.

அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம்.

இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது.

அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும்.

அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.

அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது சித்தர்கள் வாக்கு.

காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி நடப்பான் என சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு சித்த மருத்துவத்துவத்தில் எண்ணற்ற பலன்கள் அடங்கி உள்ளது.
1460540992 9736

Related posts

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட் -தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களின் சிறுநீர்க்கசிவுக்கு மருத்துவம்

nathan

அவசியம் படிக்க..சிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?

nathan

பல் சொத்தை வராமல் தடுக்க இதோ எளிய நிவாரணம்!

nathan

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி – இயற்கை மருத்துவம்!

nathan

பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவை

nathan

உங்கள் எலும்புகள் பலவீனமாகி பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவும் உருளைக்கிழங்கு ஜூஸ்!

nathan