நான்கு பங்கு எள்ளுடன், மூன்று பங்கு மல்லிகை பூக்களை கலந்து அகன்ற சல்லடையில் 6 முதல் 8 நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். பின் செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்தால் மணக்கும் மல்லிகை எண்ணெய் ரெடி.
தன்னோடு சேர்ந்த பிற பொருட்களையும் தன் இயல்புக்கே மாற்றி விடும் அல்கலாய்டு எனும் வேதிப்பொருள் மல்லிகையில் உள்ளதால் எண்ணெய் மணக்கிறது.
கிராமங்களில் உடல் சூட்டை தணிக்க எண்ணெய் தேய்த்து குளிப்பர். நல்லெண்ணையை விட இந்த மணக்கும் மல்லிகை எண்ணெக்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு உண்டு.