25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழு

nathan

தல பொங்கலை கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுன்

nathan

சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி..

nathan

காதலனாக பழகி அதுக்கு மட்டும் யூஸ் பண்ணிக்கிறாங்க!..த்ரிஷா

nathan

பயத்தை ஏற்படுத்திய ஜோவிகா! திட்டம் போட்ட போட்டியாளர்கள்

nathan

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை -இருவேறு தந்தைகள்!

nathan

ஏ.ஆர்.ரஹ்மான்- மனைவி விவாகரத்து!

nathan

ரித்திகா சிங் அப்படி ஒரு உடையில் பயிற்சி.. வீடியோ

nathan

Lets Get Married… தோனி படத்தின் இன்ட்ரோ டீசர் ரிலீஸ்

nathan