28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
eating chocolate
மருத்துவ குறிப்பு

சுவையின்மைக்கான சித்த மருந்துகள்

1 . மகாவில்வாதி லேகியம்
வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன்
விலாமிச்சை
நிலவாகை
பாதிரி
நன்னாரி
பருவிளா
சிற்றாமல்லி
பேராமல்லி
சிறுவிளாவேர்
சிறுவாகை
முன்னை
முசுமுசுக்கை
கொடிவலி
தேற்றான் விரை

போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு
உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு
இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர்
சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து
பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

சுக்கு
மிளகு
திப்பிலி
கடுக்காய்
நெல்லிக்காய்
தான்றிக்காய்
லவங்கம்
ஏலம்
கோஷ்டம்
அதிமதுரம்
கெந்தமாஞ்சில்
கருஞ்சீரகம்
வெண்சீரகம்
வாய்விலங்கம்
சகஸ்திரபேதி
தாளிசபத்திரி
செண்பகப்பூ
அக்கிரகாரம்
மல்லி
விளா
கார்போக அரிசி
தேக்கு
முந்திரி
பேரீச்சம்
வில்வம்
வாளுவையரிசி
சிறுநாகம்
நாகணம்
பருத்திவிரை
வேப்பன்விரை
இர்லுப்பைப்பூ.

போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி
தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக
கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

தீரும் நோய்கள்.
சுவாசகாசம்
அரோசகம்
வீக்கம்
உடம்பு எரிவு
விஷப்பாண்டு
வயிற்றெரிச்சல்
உப்பசம்
கிராணி
எரிபாண்டு
கைகாலெரிவு
காந்தல்
வாந்தி
ஓக்காளம்
அன்னதோஷம்
சூலை
எட்டு வகையான சயங்கள்
அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
நாற்பது வகையான பித்தங்கள்
அஸ்திசுரம்
அதிசாரம் முதலியன தீரும்.

2 . திப்பிலி நெய் 5
திப்பிலி
வெட்பாலை அரிசி
வில்வ வேர்
கடுக்காய்
நெல்லி வற்றல்
விலாமிச்சம் வேர்
சண்பகப்பூ
கடுகு ரோகணி
கீழ்க்காய் நெல்லி
வேப்பம் பட்டை
தான்றிக்காய்
ஆடாதோடை
திராட்சைப் பழம்
அதிவிடையம்

இவைகள் வகைக்கு 1 வராகன் எடை

மேற்கூறப்பட்ட சரக்குகளை இடித்து மசித்து, அம்மிக்கல்லில் வைத்துத்
தண்ணீர் தெளித்து நெகிழ அரைத்து ஒரு நெய்ப் பாண்டத்தில் போட்டு, கால்படி
தண்ணீர் விட்டுக் கலக்கி எல்லாம் உறவான பின், 1/4 படி பசுவின் நெய் விட்டு
அடுப்பில் ஏற்றிச் சிறுகச் சிறுக எரித்துப் பதமுறக் காய்ச்சி வடிகட்டி
வைத்துக் கொள்ளவும்.

இந்த நெய்யில் வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் இரு வேளை கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:
சுரம்
விக்கல்
தேக உளைச்சல்
அரோசகம்
தலைநோய் ஆகியவைகள் தீரும்.

பத்தியம்:
இச்சாபத்தியம்.

eating chocolate

Related posts

உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்!

nathan

அவசியம் படிக்க.. வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… வருங்கால வாழ்க்கை துணை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் இந்த 3 பழங்களையும் சாப்பிடவே கூடாதாம்…

nathan

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்

nathan

ஆஸ்துமாவின் அறிகுறிகளும் அதனை தீர்க்கும் எளிய இயற்கை மருத்துவம்…!!இத படிங்க

nathan

விருந்து வையுங்கள் குணம் தெரிந்துவிடும்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்க அருமையான வழிகள்!!

nathan

உங்களுக்கு இந்த 3 இடத்துல வலி இருக்கா?

nathan