23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ht4274
மருத்துவ குறிப்பு

வளர்ச்சிக்குத் தடையா?

ஓ பாப்பா லாலி

பூச்செடிகள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் என வீட்டை அழகுபடுத்த எத்தனையோ வழிகள் இருந்தாலும், குழந்தைகள் ஓடி விளையாடாமல் ஒரு வீட்டின் அழகு முழுமை பெறாது. அதனால்தான் ‘மழலைச் சொல் கேளாதவர்களே குழல் இனிது… யாழ் இனிது என்பர்’ என்றார் வள்ளுவர். குழந்தை இயல்பான வளர்ச்சியோடு இருக்கும்போதுதான் அந்த இனிமை முழுமை பெறும் அல்லவா?

குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரான ஆர்.சங்கர். ”குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு மரபியல்ரீதியான காரணங்கள், வாழ்க்கைச் சூழல், பொருளாதாரம் போன்ற சில காரணங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர்க்க முடியாவிட்டாலும் நம்மால் மாற்ற முடிகிற சில விஷயங்களை சரி செய்தாலே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள்.

சத்துக்குறைபாடு

பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சி இழப்புக்கு புரதச்சத்து போதுமான அளவு கிடைக்காமல் போவது முக்கிய காரணமாக உள்ளது. இதனுடன் இரும்புச்சத்து கிடைக்காமல் இருப்பதும், உணவில் இருக்கும் ஊட்டச்சத்தினை கிரகித்து கொள்ளும் ஆற்றல் இன்மை (Malabsorption Syndrome)யும் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. ரத்தசோகை பாதிப்பு, செரிமானம் போன்ற குடல் சம்பந்தப்பட்ட குறைபாடுகளாலும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

எடையும் முக்கியம்

குழந்தை பிறந்தவுடன் சராசரயாக இரண்டரை கிலோ முதல் 4 கிலோ வரை எடை இருக்க வேண்டும். இந்த சராசரி எடைக்கும் குறைவான எடையுடன் பிறக்கிற குழந்தைகளுக்கு வளர்ச்சி இழப்பு, வளர்ச்சி குறைவு ஏற்படும்.

வைட்டமின் டி

குழந்தைகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி போதுமான அளவில் கிடைத்தால்தான் எலும்புகள் வளர்ச்சி அடையும். இன்றைய வாழ்க்கைமுறை காரணமாக குழந்தைகளை விளையாட வெளியே அனுப்புவதில்லை. காயங்கள், எலும்புமுறிவு ஏற்படும் என்று அவர்களை எங்கும் வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின்றனர். இதன் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி என பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் சூரிய ஒளியையே பார்க்காமல் வளரும் குழந்தைகளுக்குப் போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்காமல் போய்விடுகிறது.

ரிக்கெட்ஸ் அபாயம்

வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக குழந்தைகளுக்கு Rickets என்ற நோய் ஏற்படக் கூடும். ரிக்கெட்ஸ் ஏற்பட்டால் கால்கள் கோணலாக காணப்படும். குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் காலத்தில் இந்த கோணல் மேலும் அதிகமாகும்.

என்ன செய்ய வேண்டும்?

இரும்புச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் டி, ரத்தசோகை குறைபாடுகளை உணவுப்பழக்கம், சிகிச்சைகள் மூலம் சரி செய்ய முடியும். ரிக்கெட்ஸ் நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். வளர்ச்சியும் பாதிக்கப்படாது. உணவுகளில் சிவப்பு இறைச்சிகள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதும் பலன் தரும். குழந்தைகள் போதுமான வளர்ச்சி இல்லாத பட்சத்தில் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதும் அவசியம்!”
ht4274

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் எடை குறைப்பில் செய்யும் தவறுகள்

nathan

எந்த வயதில் ஆண்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சியடைகிறது?

nathan

தீபாவளியும் குழந்தைகள் பாதுகாப்பும்

nathan

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி விடுதலைத் தரும் பழங்கள்!

nathan

டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?

nathan

ஏன் அக்கால ஆண்களுக்கு வயாகராவின் அவசியமே இருந்ததில்லை என்பதற்கான காரணங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கண்களின் அழகை பராமரிப்பதில் இவ்வளவு நன்மைகளா..!

nathan

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையை தவிர்க்க வழிகள்

nathan

வாயு தொல்லையை போக்கும் பெருங்காயம்

nathan