29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
soqty
பெண்கள் மருத்துவம்

பெண் எந்த வயதில் அழகாக இருக்கிறாள்…! : ஆய்வுகளின் தொகுப்பு

ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கடினம்தான்.

எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும்.

மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம்.

தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக.

ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.

மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.
soqty

Related posts

ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

nathan

மாதவிலக்கு வலி குறைய…

nathan

மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம்.

nathan

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் மாதவிலக்கின்போது பெண்கள், வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால் . . .

nathan

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

மாதவிடாய் காலத்தையே அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம்

nathan

கடின வேலையால் கருவும் தாமதமாகும்!

nathan

எடைகுறைந்த குழந்தையின் உணவு முறை

nathan

40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…!

nathan