அழகான தோற்றத்தைப் பெறவும் சருமத்தை பளபளவென வைத்திடவும் பல விதமான ஃபேஸ் பேக்குகள் வந்து விட்டன. சந்தையிலும் வகை வகையாக ஏராளமான பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் அதில் பல்வேறு ஃபேஸ் பேக்குகளில் ரசாயன பொருட்கள் பல கலக்கப்பட்டுள்ளது. அதனால் இயற்கையான ஃபேஸ் பேக்குகளையும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் பேக்குகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்தாலும், அவை குறிப்பாக சில நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் திருமணம்.
பிறகு என்ன அலங்காரம் இல்லாத மணப்பெண் இருக்க முடியுமா என்ன? மணப்பெண்ணாக போகும் பெண்கள் தினமும் விலை உயர்ந்த அழகு நிலையத்திற்கு செல்வது கஷ்டமான ஒன்று. ஆனால் அங்கே கிடைக்கும் அனைத்து பயன்களும் வீட்டிலேயே கிடைத்தால் மகிழ்ச்சி தானே! உங்களின் அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் சந்தனம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பல்வேறு வழியில் பயன்படுத்தப்படும் சந்தனம் எண்ணெய் சுரப்பதை, சரும வறட்சியை, பருக்கள் தோன்றுவதை, கருவளையங்கள் உருவாவதை கட்டுப்படுத்த உதவும். இதை விட வேறு என்ன வேண்டும்? மணப்பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒன்றாக பளபளப்பான மின்னிடும் தோற்றத்தையும் கூட இது அளிக்கிறது. சரி, நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில சந்தன ஃபேஸ் பேக்குகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?