25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Diabetes01
மருத்துவ குறிப்பு

எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் சொல்லப்படுற குடும்பத்துல ஒருத்தருக்காவது இருக்குங்கற நிலைமைதான் இன்னைக்கு பெரும்பாலும். வயதானவர்களுக்கு மட்டும்தான் இந்த சர்க்கரை நோய் பிரச்னைனு இருந்த காலம் போய், கருவில் இருக்கற குழந்தைக்கும் இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிட்டு வரும் காலம் இது.

நீரிழிவு என்றால் என்ன?

நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் சர்க்கரை வியாதி. இதற்கு காரணம் இன்சுலின் சரியான அளவு உற்பத்தி ஆகாதது அல்லது உற்பத்தியான இன்சுலினை சரியான அளவு பயன்படுத்த முடியாதது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் பெரும்பாலும் சர்க்கரை இருக்கிறது.

நம் உணவில் உள்ள இந்த சர்க்கரையை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றுவதுதான் இன்சுலினின் முக்கிய வேலை. அதில் பிரச்னை வரும் போதுதான் சர்க்கரை வியாதி தலை தூக்குகிறது.
யாருக்கெல்லாம் வரும்?

பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால், குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கலாம் என்ற நிலை. மாறி வரும் வாழ்க்கை முறையால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் வரலாம் என்ற நிலை பரவி வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் எடை அதிகமுள்ளவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகம், பசி, திடீரென அதிக உடல் எடை குறைதல், காயம் ஏற்பட்டால் சரியாக அதிக காலம் எடுப்பது, கை, கால்கள் மரத்து போனது போன்று உணர்ச்சி ஏற்படுதல் ஆகியவை பொதுவான அறிகுறிகள்.

எப்படி தவிர்க்கலாம்?

சர்க்கரை வியாதியை தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை மிக எளிமையானவையே. தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதனால், அதிக உடல் எடை சேருவது மட்டுமல்லாமல், நோய்களிலிருந்தும் தப்பித்து நம் ஆரோக்கியம் காக்கலாம். சைக்ளிங், வாக்கிங் போன்ற எளிய உடற்பயிற்சிகளே இதற்கு போதுமானவை.

எளிதாக கிடைக்கிறதே என்று சர்க்கரை மற்றும் தேவையில்லாத உடல் எடை கூட்டும் கொழுப்புகள் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். வளர்ந்து வரும் டெக்னாலஜியால் எல்லா காரியத்தையும் இருந்த இடத்திலிருந்தே முடித்துக் கொள்ளலாம் என சோம்பேறி தனமாக இருக்காதீர்கள். உங்கள் உடல் எடையை கூட்டுவதில் இவையே முழு முதற்காரணி என்பதை மறவாதீர்கள்.

எத்தனை வகைகள் உள்ளது?

மூன்று வகையான சர்க்கரை வியாதி உள்ளது. இதில் முதல் வகையானது, சிறுவர்களையும், இளைஞர்களையும் பாதிக்கக் கூடியது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். இரண்டாவது வகை தான் பெரும்பான்மையானவர்களுக்கு உள்ளது. இன்சுலின் சுரப்பிகள் போதுமான அளவு சுரக்காததாலோ அல்லது சுரந்த இன்சுலினை சரிவர பயன்படுத்த முடியாததாலோ இது ஏற்படுகிறது. மூன்றாவது வகை கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. தாய்க்கு இருப்பதால் குழந்தைக்கும் வருவதற்க்கான வாய்ப்புகள் இதில் அதிகம்.

WHO (உலக சுகாதார நிறுவனம்) என்ன சொல்கிறது?

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி, 2014-ம் ஆண்டில் மட்டும் 422 மில்லியன் குழந்தைகள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2012ல் மட்டும் 1.5 மில்லியன் மக்கள் இதனால் இறந்துள்ளனர்.

”சர்க்கரை வியாதி என்பது எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றுதான். சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்து வந்தால் இது சாத்தியமே. சரியானபடி இதனை கவனிக்காவிட்டால், பார்வை இழத்தல், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளும் எட்டிப் பார்க்கும். அதனால் கவனமாக கையாண்டு எளிதில் இதனை தவிர்க்கலாம்” என்கிறது WHO.
Diabetes01

Related posts

பாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

nathan

கர்ப்பிணிகளுக்கான எளிய சித்த மருந்துகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா மன உளைச்சலை குறைக்க 5 வழிகள்

nathan

பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவை

nathan

சின்னம்மை தாக்கினால் ஏற்படுத்தும் வடுவை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

nathan

தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு

nathan

நீர்க்கட்டிகள் நோய் அல்ல!

nathan

பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன?

nathan