32.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
sl1950
கேக் செய்முறை

கிறிஸ்துமஸ் பிளம் கேக்

என்னென்ன தேவை?

மைதா -100 கிராம்
ஓமம் தூள் – அரை டீ ஸ்பூன்
திராட்சை – 30 கிராம்
சுக்குத் தூள் -அரை ஸ்பூன்
வெண்ணெய் – 100 கிராம்
பால் – 1/4 கப்
சர்க்கரை – 100 கிராம்
சோள மாவு -2 ஸ்பூன்
முந்திரி பிஸ்தா வால்நட்- 40 கிராம்
முட்டை – 3
செர்ரி பழம் நறுக்கியது- 50
கேக் இல்லாத கிறிஸ்துமஸ் கிடையாது. அதிலும் பிளம் கேக் என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதாகும். இதை நீங்களே வீட்டில் தயார் செய்ய விரும்புகிறீர்களா… இதோ பிளம் கேக் செய்வதற்கான ரெசிபி…

எப்படி செய்வது?

கேக் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு பரப்பி, டின்னுக்கு வெளியே இருக்கும்படி இழுத்து விடவும். அடுத்ததாக, சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும். கட்டி தட்டாமல் இருக்க வேண்டியது அவசியம். மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். முட்டையை நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக் மிக்சரில் போட்டு கலக்கவும். பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும். சிறு துண்டுகளாக நறுக்கிய செர்ரி பழங்களை போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் அவனில் 40 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான பிளம் கேக் ரெடி.
sl1950

Related posts

நாவூறச் செய்யும் நாவல்பழ கேக்

nathan

பலாப்பழ கேக்

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

பனானா கேக்

nathan

புளிக்கூழ் கேக்

nathan

கூடை கேக்

nathan

அரிசி மாவு கேக்

nathan

உருளைக்கிழங்கு பான்கேக்

nathan

எக்லெஸ் கேரட் கேக்

nathan