திரைப்படங்களில் பொது அரசியல் இருக்க வேண்டுமா என்ற கேள்வி இன்றும் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. இதில் ஒருமித்த கருத்து இல்லை என்றாலும், சினிமாவில் அரசியலை பண ஆதாயத்திற்காக பயன்படுத்துவது பாராட்டத்தக்கது அல்ல என பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இன்று அரசியல் இல்லாத இந்தியப் படம் இருப்பதாக நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பெரும்பாலான படங்களில் வில்லன் அரசியல்வாதியாகவே இருக்கிறார். உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் முதன்மை வில்லன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தச் சித்தரிப்பு ஒரு திரைப்படத்தில் நான் பார்க்க விரும்பும் அரசியல் அல்ல.எ வெனஸ்டே(2008), பம்பாய் (1995), ரோஜா (1992), இருவர் (1997)போன்ற அரசியல் படங்களைப் பார்க்க விரும்புகிறேன்.
இவையும் உண்மையில் அரசியலைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் திரைப்படங்கள் அல்ல,” என்று உரையாடலில் கூறினார்.
இயக்குனர் சுஹாசினி மேலும் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அரசியல் படங்கள் தயாரிப்பது கடினம் என்றும், இன்றைய சூழலில் இயக்குனர் மணிரத்னத்தால் தில் சே… அல்லது பாம்பே போன்ற படங்களை எடுக்க முடியுமா என்பது எனக்கு சந்தேகம் என்றும் கூறினார். இயக்குனர் ஷபானா ஆஸ்மியின் கருத்துக்களை நினைவு கூர்ந்தார். மேலும் தற்போதைய சூழலில் ஷோலே போன்ற ஒரு படத்தை கூட எடுக்க முடியாது என்றார்.
“முன்பு, நீங்கள் எதை பார்த்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால் இப்போதெல்லாம், அனைவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கிறது. இதனால் வாக்குவாதம் இருப்பதாகத் தெரிகிறது, மேலும் அரசியல் என்பது சர்ச்சைக்குரிய எளிதான தலைப்பு, ”என்று கூறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஒருமுறை ஹீரோவின் மடியில் அமர்ந்து அவர் சாப்பிடும் அதே ஐஸ்கிரீமை நக்க வேண்டிய ஒரு காட்சியை செய்ய மறுத்ததையும் பற்றி கூறியிருந்தார். இதுபோன்ற சண்டைகளில் தனியாக இருப்பது கடினம் என்பதால், என்னை ஆதரிக்கும் ஒருவரை எப்போதும் செட்டில் வைத்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.