லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில பிராந்தியங்களில் அறிவிப்பு தேதிக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கியது. அது போலவே நேற்று மதியம் முதல் கோபுரம் திரையரங்கில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. முன்பதிவு செய்த 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
Dear VijayFans
This is to inform you all that we have been notified of Fake Ticket sales in Recent Days.
So we Kindly request Everyone not to Buy those proxy Tickets, as our Cinipriya Management will not be Responsible for those Tickets.
Thanks!
With love,
Cinipriya Complex. pic.twitter.com/7M5n8zNTEt— Priya Cinemas 🎭 (@Priya_Cinemas) October 10, 2023
மதுரையில் சுமார் 20 திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. ஒரே ஒரு தியேட்டரில் நேற்று முன்பதிவு தொடங்கியது. லியோவுக்கான டிக்கெட் விலை ரூ.190. மீதமுள்ள திரையரங்குகளுக்கான முன்பதிவு இன்று மற்றும் நாளை மறுநாள் தொடங்கும்.
இதேபோல் மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டர் என்ற பெயரில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. லியோ ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னதாக, அக்டோபர் 18-ம் தேதி பிரீமியர் ஸ்கிரீனிங் நடைபெறும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சினிப்ரியா திரையரங்க உரிமையாளர்கள் போலி டிக்கெட் விற்பனை குறித்து எச்சரிக்கை விடுத்தனர். “அன்புள்ள விஜய் ரசிகர்களே. சமீபத்தில், போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த ப்ராக்ஸி (போலி) டிக்கெட்டுகளுக்கு சினிப்ரியா நிர்வாகம் பொறுப்பேற்காது, எனவே இந்த ப்ராக்ஸி (போலி) டிக்கெட்டுகளை தவிர்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து வாங்க வேண்டாம். “