இஸ்ரேலின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பினர் திடீரென நடத்திய ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் இதுவரை 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த நேரத்தில் அவுஸ்திரேலியா இஸ்ரேலுடன் நிற்கிறது. ஹமாஸின் இந்த கண்மூடித்தனமான மற்றும் வெறுக்கத்தக்க தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது.”