இத்தாலியில் உள்ள இலங்கை வாகனத் தரிப்பிட காவலர் ஒருவர் தனக்கு 60 யூரோக்களை கொடுக்க மறுத்ததால் பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடத்தலில் ஈடுபட்ட 40 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு, கடத்தல் மற்றும் கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை நிறுத்தினர். இதன் போது இலங்கையர் ஒருவர் தம்பதியை தடுத்து நிறுத்தி காரணமின்றி பணம் கேட்டுள்ளார்.
பணம் கொடுப்பதற்கு ஆணும் பெண்ணும் எதிர்ப்பு தெரிவித்ததால், இலங்கையர்கள் அந்த பெண்ணை காரில் இருந்து இறக்கி அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர்.
கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற கண்ணீருடன் காவல் நிலையம் ஓடினார் காதலன்.
பாதிக்கப்பட்ட காதலியின் கையடக்கத் தொலைபேசி ஊடாக இலங்கை இளைஞனின் இருப்பிடத்தைக் கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.