23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
குழந்தையின் அழுகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்!
மருத்துவ குறிப்பு

குழந்தையின் அழுகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்!

சமீபத்தில் நடந்த அந்த சோக நிகழ்வு, அனைவரது மனதையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. தனியாக ஒரு பெண் தனது குழந்தையை சமாளிப்பது அவ்வளவு கடினமான விஷயமா? குழந்தை எதற்காக அழுகிறது என்பது கூட புரிந்து கொள்ள முடியாததாயா? என்று பல கேள்விகள் எழுகிறது.

தொடர்ந்து குழந்தை அழுததால் அதன் அழுகையை நிறுத்தத் தெரியாத தாய் கயல் விழி, 33 நாட்களே ஆன ஆண் குழந்தையை வீட்டின் பின் பக்கத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு, தானும் பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது எவ்வளவு அசட்டுத்தமான செயல் என்று சொல்லத் தோன்றுகிறதா? ஆம் அடுத்து இப்படியொரு சோக சம்பவம் நடந்து விடக்கூடாதே என்ற பதை பதைப்பு ஒவ்வொருவர் மனதிலும் ஒட்டிக் கொண்டது.

பிறந்த குழந்தையின் முதல் மொழியே அழுகைதான். அது தனக்கான தேவைகளை அழுகையின் வழியாக வெளிப்படுத்துகிறது. அந்த அழுகையின் அர்த்தங்கள் இயல்பாகவே ஒரு தாய்க்கு புரியும். பொதுவாக குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களுக்கு, தாய்க்கு முழுமையான தூக்கம் மற்றும் ஓய்வும் இருக்காது. குழந்தை பிறக்கும் போது உடலளவில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உளவியல் மாற்றங்களும் பிரசவகால மன அழுத்தத்தை உருவாக்குகிறது.

வீட்டில் இருப்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். பிரசவம் அடைந்த பெண்ணுக்கு, உறவினர்கள் போதிய அன்பையும் கவனிப்பையும் வழங்க வேண்டும். சத்தான உணவும், ஓய்வும் இந்த காலகட்டத்தில் அவசியம். குழந்தையை கவனித்துக் கொள்வதிலும், உறவினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. உறவினர்கள் இல்லாத பட்சத்தில், குழந்தை பராமரிப்பில் கணவனின் உதவிகள் பக்கபலமாக இருக்கும்.

அழும் குழந்தைகளின் தேவை குறித்து, மருத்துவரிடம் முன்பே கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம் தேவையற்ற டென்சனைத் தவிர்க்கலாம். தொடர்ந்து குழந்தை அழும்போது அருகில் உள்ளவர்களின் உதவியுடன், மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம். மருத்துவரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும் ஆலோசனை பெறலாம்.

தாய் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதத்தை கவனிப்பதன் மூலம், அவரது மனநிலையை உணர்ந்து கொள்ளலாம். பிறந்த குழந்தையின் மீது தாய் போதிய கவனிப்பு செலுத்தாமல் அக்கறை இன்றி இருந்தாலோ, வெறுப்பைக் காட்டினாலோ மருத்துவரிடம் இது குறித்து விளக்கம் பெற வேண்டும்.

தேவைப்படும் பட்சத்தில் தாய்க்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தாய் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். குழந்தையின் அழுகைக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அமைதியான மனநிலையில் உள்ள தாயால் மட்டுமே அதற்கான அர்த்தங்கள் புரிந்து உதவ முடியும்.
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Related posts

தாங்க முடியாத காது வலியா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..!

nathan

உங்களுக்கு தெரியுமா மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா ஒரே நாளில் சக்கரை வியாதி, புண்களை குணமாக்கும் நித்திய கல்யாணி!

nathan

காதலில் ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிப்பது எப்படி

nathan

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

nathan

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் குங்குமப் பூ!

nathan

ஆஸ்துமாவை குணமாக்கும் கிராம்பு

nathan

புற்றுநோய் இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் 30 நாட்களில் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன தெரியுமா?படிங்க!

nathan