ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த சேதமடைந்த ஹெராத் நகரில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானை தாக்கிய இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவானது என்றும், வீடுகள் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் நாட்டில் அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் தடைப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹெராட்டில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் மேலும் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் மையம் தெரிவித்துள்ளது.