ஒரு வெற்றிகரமான தொழிலதிபரிடம், “உங்கள் உத்வேகத்தின் ஆதாரம் யார்?” என்று நீங்கள் கேட்டால், அவர்கள் பெரும்பாலும் சாதாரண மக்களைக் குறிப்பிடுகிறார்கள்.
வீடு வீடாகச் சென்று காய்கறி விற்பவர்கள், பூ விற்பவர்கள், கழிவுநீர் சுத்தப்படுத்துபவர்கள், பிறரை ஏமாற்றாமல், பிறரின் உதவியை எதிர்பார்க்காமல் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் தேவையானதை சம்பாதிக்கத் தயாராக இருப்பவர்கள்.
ஆனால், உழைக்கும் காலம் முடிந்து, ஓய்வெடுக்க வேண்டிய வயதில், ஒரு கை இல்லாவிட்டாலும், மீதமிருக்கும் ஒரு கையால் குடும்ப பொருளாதாரத்தை மொத்தமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஒரு முதியவர்.
கோயம்புத்தூர் மக்கள், பரபரப்பான சாலையில், ஒற்றைக் கையோடு, பார்சல்கள் மற்றும் கடிதங்களை ஏற்றிய கடந்து செல்லும் இவரை, ஒரு நிமிடம் ஆச்சர்யமாக நின்று பார்க்கத் தவறுவதில்லை கோவை மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் சாதியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராமன் என்பவர்தான் அந்த முதியவர். மூட்டுவலி மற்றும் கால் வலி காரணமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடக்க முடியாமல் தவிக்கும் நிலையில், 80 வயதுக்கு மேற்பட்டவர் தேனீக்கள் போல் மாதிரி சுறுசுறுப்பாக சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்று, கூரியர் டெலிவரி செய்கிறார் இவர்.
1969 ஆம் ஆண்டு, சிலமன் கிராமத்தில் வசித்து வந்தபோது, ஒரு நாள் கூரிய கொம்புகள் கொண்ட பசுவிடம் இருந்து தனது குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானார். இச்சம்பவத்தில் அவருக்கு வலது கை முறிந்தது.
அப்போது நவீன சிகிச்சைகள் எதுவும் கிடைக்காததால் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. செயற்கை கை மாற்று அறுவை சிகிச்சையும் தோல்வியடைந்தது. இதனால் அவர் வீட்டில் முடங்கி விடவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கையால் ஓட்டுவது எப்படி என்பதை படிப்படியாகக் கற்றுக்கொண்டார்.
இதற்கிடையில், 1971 இல், அவர் ஒரு கிராமப்புற அஞ்சல் அலுவலகத்தில் சேர்ந்தார். 36 ஆண்டுகள் தபால் துறையில் பணியாற்றி 2007ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு, ஸ்ரீராமன் குடும்பத்துடன் கோவைக்குச் சென்றார்.
ஒரே மகளுக்குத் திருமணமாகி வெளியூர் சென்றதும், அவருக்கு ஓய்வூதியம் இல்லாததால், ஸ்ரீராமன் தனது குடும்பத்துக்கும், மனைவியின் மருத்துவச் செலவுக்கும் பணம் திரட்ட மீண்டும் ஓடத் தொடங்கினார். தபால் துறையில் எனது அனுபவத்தைப் பயன்படுத்தி ஒரு தனியார் டெலிவரி நிறுவனத்தில் சேர்ந்தேன்.
ஒவ்வொரு நாளும், ஸ்ரீராமன் தனது மிதிவண்டியில் பல கிலோமீட்டர்கள் பரபரப்பான சாலைகள் மற்றும் பக்கத் தெருக்களில் சென்று, வீடு வீடாக பார்சல்களை விநியோகிக்கிறார்.
“தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.உடலில் வலிமையும்,மனதில் நம்பிக்கையும் இருக்கிறது.அதனால்தான் இந்த வயதிலும் உழைக்கிறேன்.என் மனைவிக்கு நீண்ட நேரம் நிற்க முடியாத நோய்.. எனக்கு மாதம் 60,000 ரூபாய் மருத்துவச் செலவு. குடும்பத்துக்கான செலவையும் கருத்தில் கொள்ள வேண்டும்.வலது கை இல்லையென்றாலும் மனம் தளராமல் தினமும் 20-30 கி.மீ சைக்கிள் ஓட்டி உழைக்கிறேன்.
உடல் உறுப்புகள் சரியாக இருந்தாலும் அது போன்ற வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. வெயிலுக்கு அடியில் அலையவேண்டாம் என சாக்குப்போக்கு சொல்லி, பெற்றோரின் வருமானத்தில் வயிறு வளர்க்கும் பல இளைஞர்களுக்கு ஸ்ரீராமனின் வாழ்க்கை சாட்டையடி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்ரீராமனின் தன்னம்பிக்கை கதை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.