28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
6Cq1j4n
மருத்துவ குறிப்பு

கோடை நோய்களை தடுப்பது எப்படி?

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு, என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியை தொடுகிறது. அப்போது உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலை சுத்தமாக பராமரிக்கவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது. தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும்.

உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையை குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரை தடவிவர இது குணமாகும். கோடையில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீர் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களள் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்னை வராது.

வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிகமாக பெருகும். இந்த உணவுகளை சாப்பிட்டால் பலருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். இதனால் வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் அவசியம். தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். தண்ணீரின் தாகம் அதிகமாக இருக்கும். இதில் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். பாட்டில் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். காரணம்? குளிர்பானங் களை வரம்பின்றி குடிக்கும்போது அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. இதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைகின்றன. இதனால் உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாக குறைகின்றன. எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனை பெற உதவும்.

உணவு வகைகள்: இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கூழ், அகத்திகீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைகோஸ், வாழைத் தண்டு, வெங்காயபச்சடி, தக்காளி கூட்டு போன்றவை கோடைக்கால உணவு வகைகள்.
தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும்.

தவிர்க்க வேண்டியவை

கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்றவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல் சூடான, காரமான மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டும் என்றால் குடையை எடுத்து செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.

குழந்தைகள், முதியோர்கள் உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால் கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து கொள்ளலாம். உடைகளை பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே, அவற்றில் கூட இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.

கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும். ஆகவே இத்தன்மையுள்ள ஆடை களை தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழை களால் ஆன ஆடை களையும் தவிர்க்க வேண்டும். வெண்மை நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவை என்று வேலூர் டாக்டர் எஸ்.சக்கர வர்த்தி கூறினார்.6Cq1j4n

Related posts

பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? ஸ்மார்ட் ப்ளீச் செய்யுங்க!

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்

nathan

விவாகரத்துக்கு முன்பும்.. பின்பும்..

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்..!

nathan

வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால் இதனை கவனமாக வாசியுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…புகைப்பிடிப்போரின் அருகில் கர்ப்பிணிகள் இருந்தால், அது குழந்தையை எப்படி பாதிக்கிறது?

nathan

இந்தியப் பெண்களுக்கு 5 ஆலோசனைகள்

nathan

ரத்தத்தில் ஒளிந்திருக்கும் 3 மாத ரகசியம்!

nathan

சளித் தொல்லை, ஜீரணசக்திக்கு மூலிகைப்பொடி

nathan